ராஜ் டிவி காப்பிரைட் வைத்திருந்த திரைப்படங்களை அனுமதி இல்லாமல் ஒளிபரப்பியதாக வசந்த் டிவிக்கு எதிராக ராஜ் டிவி காவல்துறையிடம் புகார் செய்துள்ளது. "எங்கள் நிறுவனம் உரிமம் பெற்றுள்ள திரைபடங்களையோ,
பாடல்களையோ, காட்சிகளையோ ஒளிபரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து பலமுறை நோட்டிசு அனுப்பியும், அதை மீறி வசந்த் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது" என்று அந்த புகாரில் கூறியிருக்கின்றனர். இந்த புகாரின்பேரில், சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் வசந்த் தொலைக்காட்சியின் மீது காப்பிரைட் சட்டப்படி வழக்குப்பதிவு செய்தனர். வசந்த் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் வசந்தகுமார், இயக்குநர்கள் தமிழ்செல்வி, விஜய்குமார் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment