கோடம்பாக்கம் முழுக்க தேடிட்டோம், எங்க போனீங்க...?
"எல்லாம் ஹிந்திப் படத்துக்காக கால்ஷீட் கொடுத்து மாட்டிகிட்ட நேரம் சார். எப்பவுமே தென்னிந்திய நடிகர், நடிகைகள் அங்க போயி சைன் பண்றது சிரமம். ஏன்னா அங்க ஒர்க்கிங் ஸ்டைலே வேற. அதை புரிஞ்சுக்கிட்டு நடிக்கப் போனாதான். இல்லைனா இப்படி டைம் வேஸ்ட், கால்ஷீட் வேஸ்ட்ன்னு ஆகும். அங்க நடந்த குளறுபடியில் 'ஆப்தரஷ்கா', 'சந்திரமுகி', 'ரெண்டு' ஆகிய பட வாய்ப்பையே இழந்துட்டேன்னா பாருங்களேன்..."(அச்சச்சோ...)தமிழ்ல விட்ட இடத்தைப் பிடிச்சிருவீங்களா?
"யெஸ்.... அதுக்காகத்தான் முழு வீச்சுல இறங்கியிருக்கேன். தெலுங்குல ரவிச்சந்திரன் கூட ஒரு படம் ரிலீஸாகப் போகுது. அதை முடிச்சா 'புலிவேஷம்தான்'. பி.வாசு சார் படம், ஆர்.கே.சார் படம் என்கிறதால நம்பிக்கையா இருக்கு. இனி ஒரு ரவுண்ட் வருவேன் பாருங்க."வேறென்ன பொழுதுபோக்கு உங்களுக்கு?
"பிராணிகள் வளர்ப்பதில் எனக்கு ரொம்ப ஆர்வம். அதனால வீட்ல ரெண்டு நாய்கள் வளர்க்கிறேன். ஷூட்டிங் இல்லாட்டி அதோடுதான் பொழுது போகும். நான், மாதவன், த்ரிஷா மூணு பேரும் இந்த விஷயத்துல ஒரே சிந்தனை உள்ளவங்க. லெதரில் பண்ணின எதையும் பயன்படுத்தமாட்டோம்."
'புலி வேஷ'த்துல என்ன கேரக்டர்?
"நிஜமாகவே சொல்றேன் அது புதிரான கேரக்டர். அதைப் பற்றி சொன்னால் கண்டிப்பா படம் பார்க்கிறவங்களுக்கு சஸ்பென்ஸ் இருக்காது."
இந்த கிளாமர் கொஞ்சம் ஓவரா தெரியல...?
"அட... படத்துல ஒரு சின்ன சீன்ல வந்து போற சீன் இது. படம் முழுக்கன்னு நினைச்சிட்டு வராதீங்க. ஆமா... கிளாமர் காட்டினா ரசிச்சிட்டு போக வேண்டியதுதானே... இதென்ன இப்படி ஒரு கேள்வி."
No comments:
Post a Comment