தொடர்ந்து நான்கு படங்களின் தோல்விகள் என்றால் விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோவுக்கு நெருக்கடி இல்லாமல் எப்படி இருக்கும்?
இதனால்தான் தனது அடுத்தடுத்த மூன்று படங்களை ஹாட்ரிக் வெற்றியாக கொடுத்தே தீருவது என்ற முடிவுடன் இயக்குனர்களையும், கதைகளையும் மிகக் கவனமாக தனது அப்பா எஸ்.ஏ.சியுடன் தேர்ந்தெடுத்தெடுத்து காய்களை நகர்த்தி வருகிறார் விஜய்.
அதில் முதலாவது வெற்றியாக அமையப்போவதுதான் காவலன். மலையாளத்தில் சித்திக் இயக்கிய பாடிகார்ட் படத்தை, விஜய்க்கு எவ்வித எக்ஸ்ட்ரா சேர்க்கைகளும் இல்லாமல் கதைக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கிறார் சித்திக்.
விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் அதேநேரம், குடும்பத்துடன் பார்க்கும் படமாகவும் காவலைனை உருவாக்கியிருக்கிறார்கள். தோல்விகளில் இருந்து விஜய் மீண்டு எழும் முதல் படமாக காவலன் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டதால்தான் விஜயின் காவலனை ரிலிஸ் ஆகவிடாமல் தடுக்க பல வகையிலும் சதிகள் செய்வதாக சொல்லியிருக்கிறார் விஜய்.
இப்போது காவலன் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது உறுதியாகி விட்ட நிலையில். திருச்சி, தஞ்சை மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் மட்டும், சுறா படத்தின் நஷ்டத்தை கொடுக்கா விட்டால் காவலனை எங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று கொடி தூக்கினார்கள்.
இப்போது திருச்சி மாவட்ட உரிமையோடு செங்கல்பட்டு, வடவார்காடு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்ட விநியோக உரிமையையும் நாடோடிகள் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனிடம் விற்று விட்டதால் காவலனுக்கு எழுந்த திருச்சி பிரச்சனையும் தீர்ந்து விட்டதில் கோலாகலமாக காவலன் வெளியீட்டுக்கு தயாராகி விட்டார்கள்.
இதற்கிடையில் பாடிகார்ட் மலையாளப்படத்தின் ரீமேக்தான் காவலன் என்று தெரிந்தும் மீண்டும் அதை வரவேற்க்க தயாராகி விட்டார்கள் மலையாள ரசிகர்கள்.
இன்னொரு பக்கம் இதுவரை மலையாளப்படங்கள், மலையாள நடிகர், நடிகையர், தொழில் நுட்பக்கலைஞர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கிவரும் கேரளத்தின் நம்பர் 1 தொலைக் காட்சியான ஏசியாநேட்,
முதல் முறையாக சிறந்த தமிழ்நடிகர் என்ற விருது வகைமையை புதிதாக உருவாக்கி முதல் விருதை விஜய்க்கு வழங்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட அஜித், இது எந்த தமிழ் நடிகருக்கும் கிடைக்காத கௌரவம் என்று நேற்று பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பில் இருந்தபடியே விஜய்க்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். பின்னுங்க விஜய்
No comments:
Post a Comment