Thursday, January 6, 2011

TamilNaduGovernmentSubmitsInterimBudjet

பிப்ரவரி 4-ல் தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்

தமிழகத்தில் வரும் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 4-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவைச் செயலாளர் மா.செல்வராஜ் நேற்று வெளியிட்டார்.
13-வது சட்டப் பேரவையின் 15-வது கூட்டத் தொடர் ஜனவரி 7-ம் தேதி(நாளை) தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநரின் உரையுடன் ஆரம்பிக்கிறது. கூட்டத் தொடர் ஒரு வார காலத்துக்கு நடைபெறும் எனத் தெரிகிறது.  13-வது சட்டப் பேரவையின் பதவிக் காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு பிப்ரவரி 4-ம் தேதி சட்டப் பேரவை கூடுகிறது. அன்றைய தினம், நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதன்பின், விவாதம் நடைபெறும். இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 11-ம் தேதி இறுதி துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்தத் தகவலை சட்டப் பேரவைச் செயலாளர் மா.செல்வராஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிக்கை வந்த பிறகு இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் அதில் புதிய திட்டங்களைச் சேர்க்க முடியாது. இதனால், பிப்ரவரி மாதத்திலேயே இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், ஆளுநர் உரையிலும் சில புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்ற
Share/Bookmark

No comments:

Post a Comment