

எப்போதும் வெளியில் அஜீத் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் முறைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் தலயும், தளபதியும் கூடிக் குலவி நட்பு பாராட்டி வருகின்றனர்.
இரு நடிகர்களின் இப்போதைய மார்க்கெட் நிலவரம் ஒன்றும் சரியாக இல்லை. பற்றாக்குறைக்கு அரசியல் பற்றி இருவருமே பரபரப்பாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி தேவை. அதற்காக அஜீத்தும், விஜய்யும் படுபிஸியாக நடித்து வருகின்றனர். அஜீத் மங்காத்தா சூட்டிங்கிலும், விஜய் வேலாயுதம் சூட்டிங்கிலும் பிஸியாக இருக்கின்றனர்.
இருவரது படங்களின் படப்பிடிப்புகளும் இப்போது சென்னை பின்னி மில்ஸில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு இடைவேளையின்போது, திடீரென்று அஜீத்தும், விஜய்யும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் அவர்களது படம்குறித்து விசாரித்துக் கொண்டனர். இவர்களுடன் மங்காத்தா பட இயக்குநர் வெங்கட்பிரபுவும் உடனிருந்தார்.

No comments:
Post a Comment