Wednesday, January 19, 2011

PoliceLathiCharge in petroleum protesters in chennai

பெட்ரோல் விலையை குறைக்கக்கோரி, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் 8 பேர் காயம் அடைந்தனர்.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த சுமார் 150 பேர், சென்னை னங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பவனை நேற்று காலை முற்றுகையிட வந்தனர். இந்த போராட்டத்திற்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட தலைவர் லெனின் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் சண்முக சுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்கள் இந்தியன் ஆயில் பவன் வாயிலில் நின்றுகொண்டு, பெட்ரோல் விலையை உடனே குறைக்கக்கோரி கோசம் எழுப்பினார்கள். அப்போது, கூட்டத்தில் நின்ற சிலர் திடீரென பிரதமர் மன்மோகன்சிங் உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், சிலர் இந்தியன் ஆயில் பவன் கதவை திறந்துகொண்டு, உள்ளே சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பதற்றம் நிலவியது. உடனடியாக, போலீசார் அங்கு னழைந்து போராட்டக்காரர்களை வெளியேற்ற முயற்சி செய்தனர். இதனால், அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. உடனடியாக போலீசார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி, அவர்களை கலைத்தனர். அங்கு, கூச்சல் - குழப்பம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 60 பேரை கைது செய்த போலீசார், நுங்கம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் சென்னை நகரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையையும் மத்திய, மாநில அரசுகள் எடுப்பதில்லை. மாறாக, விலைஉயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி போராடும் இயக்கங்கள் மீது காவல்துறையின் தடியடித்தாக்குதல் நடத்தப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது காவல்துறை கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.
சேலம் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதும் காவல்துறை தடியடியினால் வாலிபர் சங்கத்தினர் படுகாயமுற்றனர். காவல்துறையின் இத்தகைய தடியடி வன்முறைத்தாக்குதலையும், ஜனநாயக இயக்கங்கள் மீது தமிழக அரசு தொடுத்துள்ள அடக்குமுறையையும் மார்க்சிஸ்ட் கம்னினிஸ்டு கட்சி கண்டிக்கிறது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share/Bookmark

No comments:

Post a Comment