
சேரனுக்கு ஜோடியாக "முரண்' படத்தில் நடித்து வருகிறார் ஹரிப்பிரியா. "" சேரன் ஜோடியாக நடிக்கும் "முரண்' எனக்கு 3-வது படம். ஹீரோயின் மட்டுமல்லாமல் நடிப்புக்கு தீனி போடும் படமாகவும் இது வந்துள்ளது. இந்த ஆண்டில் இந்தப் படம் ரிலீசாகிறது. தெலுங்கில் "பில்லா ஜமீன்தார்' என்ற Actrees படத்தில் நடிக்கிறேன். தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்த போதிலும் தமிழில் நல்ல கதைகள் கொண்ட படங்களையே தேர்வு செய்கிறேன். கன்னடத்தில்தான் அறிமுகமானேன். ஆனால் இப்போது ஒரு படங்கள் கூட கைவசம் இல்லை. அது பற்றி கவலையில்லை. திருமணத்துக்குள் நல்ல படங்களில் நடித்து விட வேண்டும் என்ற லட்சியம் வைத்திருக்கிறேன். தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆசை இல்லை. அப்படி நடித்திருந்தால் இந்நேரம் தமிழில் 10-க்கும் மேற்பட்ட படங்களை முடித்திருப்பேன். அப்படி வருகிற புகழும், பணமும் எனக்கு வேண்டாம். "முரண்' படத்துக்குப் பின் என் சினிமா கேரியர் மாறும். நல்ல கதைகள் கிடைக்கவில்லை என்றால் சினிமாவை விட்டே விலகி விடுவேன்'' என்றார் ஹரிப்பிரியா.Flims

No comments:
Post a Comment