இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு இந்தாண்டுக்கான சர்வதேச ஏ.என்.ஆர்., விருது வழங்கப்படுகிறது. இதனை பிரபல தெலுங்கு நடிகர் அக்னி நாகேஸ்வர ராவ் அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குநர் சிகரம் என்று போற்றப்படுபவர் கே.பாலசந்தர். ஏராளமான தமிழ் படங்களை இயக்கியுள்ள இவர், தெலுங்கிலும் பல படங்களை இயக்கியுள்ளார். இதுதவிர இரண்டு மொழிகளிலும் சின்னத்திரையில் சீரியல்களும் இயக்கியுள்ளார். தமிழில் கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களையும் அறிமுகப்படுத்திய இவர், தெலுங்கில் ஜெயப்பிரதா, பிரகாஷ்ராஜ் மற்றும் ஜெயசுதா உள்ளிட்டவர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இன்றைய இயக்குநர்களுக்கு இவர்தான் குரு. ஏற்கனவே பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள இவருக்கு, இந்தாண்டுக்கான சர்வதேச விருது ஏ.என்.ஆர்., விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் ஜனவரி 11ம் தேதி இந்த விருது வழங்கப்படுகிறது. இவ்விருதை ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி வழங்குகிறார். இதற்காக சில தினங்களுக்கு முன்னர் நாகார்ஜுனா மற்றும் அக்னி நாகேஸ்வர ராவ் ஆகியோர் முதல்வர் கிரண் குமார் ரெட்டியை சந்தித்து முறையாக அழைத்துள்ளனர்.
No comments:
Post a Comment