தந்தை விஜயகுமாருடன் கடுமையாக மோதி வரும் நடிகை வனிதா விரைவில் அரசியல் கட்சி ஒன்றில் சேர்ந்து பணியாற்றப் போகிறாராம். இதை அவரே கூறியுள்ளார். விஜயகுமார் குடும்பத்துடன் மிகக் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளார் வனிதா. தற்போது அவருக்கும், முதல் கணவர் ஆகாஷுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. மகன் விஜய ஸ்ரீஹரி யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக விஜயகுமார், ஆகாஷ் ஆகியோருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார் வனிதா. குழந்தையை வனிதாவிடம் ஒப்படைக்க கோர்ட்
உத்தரவிட்டுள்ள போதிலும் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் வைத்து தந்தை விஜயகுமாருடன் கடும் அடிதடியில் குதித்தார் வனிதா. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது மகன் என்னிடம் வந்து சேரும் வரை நான் விட மாட்டேன். இறுதி வரை போராடுவேன். யாருக்கும் நான் பயப்பட மாட்டேன். கடவுள் என் பக்கம் இருக்கிறார். அவரது துணையுடன் கடுமையாக போராடுவேன். எனது மகனை நான் விட்டுத் தர மாட்டேன். 9 வருடம் நான் அவனை வளர்த்தேன். ஆனால் என்னிடம் வர மாட்டேன் என்று அவன் கூறுகிறான். அந்த அளவுக்கு அவனைக் குழப்பி வைத்துள்ளனர் என்றார் வனிதா. பின்னர் அவரே ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து பணியாற்றவுள்ளேன். விரைவில் நான் அக்கட்சியில் சேருவேன் என்றார். எந்தக் கட்சி என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அதுகுறித்து இப்போது சொல்ல முடியாது என்றார் வனிதா. இப்பயே நாறுது... இதுல அரசியல் வேறயா... ரொம்ப நல்லா நாறும்!
No comments:
Post a Comment