Friday, December 31, 2010
தமிழர்களுக்கு அவசர அழைப்பு
Dear Friends,
Director K. Balachander bags ANR International Film Award
Director K. Balachander bags ANR International Film Award
கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்:மருத்துவ சீட்
தஞ்சாவூரைச் சேர்ந்த கிருத்திகா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:-
எம்.பி.பி.எஸ்., படிப்பில் அரசு ஒதுக்கீட்டில், எனக்கு இடம் கிடைத்தது. சென்னை, மாங்காட்டில் உள்ள ஸ்ரீமுத்துகுமரன் மருத்துவக் கல்லூரியில், சேர்வதற்காக உத்தரவிடப்பட்டது. என் தந்தை, காலை 11 மணி முதல் கல்லூரியில் காத்திருந்தார். சாலை விபத்தால், மாலை 5.40 மணிக்கு தான் என்னால் கல்லூரிக்கு வர முடிந்தது. மாலை 5 மணிக்கு பின் வந்ததால், எனக்கு கல்லூரியில், அனுமதி கிடையாது என மறுத்துவிட்டனர். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க, செப்.30 கடைசி தேதி என உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. ஆனால், கடைசி தேதியில் சேர்வதற்கு நேரம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. தேர்வுக் குழு தான் நேரத்தை நிர்ணயித்துள்ளது.
என் இடத்தில் வேறொருவரை சேர்த்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடத்தில், நிர்வாகம் சார்பில், வேறொரு நபரை சேர்க்க முடியாது. கணிசமான அளவுக்கு பணம் பெற்றுக் கொண்டு சேர்ந்துள்ளனர். அந்த நபர் மட்டும் எப்படி மாலை 5 மணிக்கு மேல் கிடைத்தார் என, தெரியவில்லை. எனவே, எம்.பி.பி.எஸ்., படிப்பில் என்னை சேர்க்க, ஸ்ரீமுத்துகுமரன் மருத்துவக் கல்லூரிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு, ஸ்ரீமுத்துகுமரன் மருத்துவக் கல்லூரி தரப்பில், தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் செப். 30ல் தான், கல்லூரியில் சேர்ப்பதற்கான கடைசி தேதி என உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. 30ம் தேதி மாலை 5 மணிக்கு முன், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த எட்டு பேரும் வரவில்லை. எனவே, நிர்வாக ஒதுக்கீட்டில் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில், மாலை 5 மணிக்குப் பின், எட்டு பேரை சேர்த்தோம். மாலை 5 மணிக்கு அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்கள் காலாவதியாகி விடுகிறது. அதன்பின், நிர்வாக ஒதுக்கீட்டில் இடங்களை நிரப்புவது சட்ட விரோதம் அல்ல. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.சிங்காரவேலன் ஆஜரானார். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியுள்ளதாவது:-
மனுதாரருக்கான இடத்தில் வேறொருவர் சேர்க்கப்பட்டுள்ளார். அப்படி சேர்க்கப்பட்ட மாணவருக்கு நோட்டீஸ் அனுப்பியும், மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, அந்த மாணவர் சார்பில் நோட்டீசை, மருத்துவக் கல்லூரி தரப்பில் ஆஜராகும் வக்கீல் ஏற்க வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் எட்டு மாணவர்களையும் சேர்க்க, மாலை 5.30 மணிக்கு மேல் எவ்வளவு நேரம் ஆகியது என்பதை கல்லூரியின் வக்கீல் தெரிவிக்க வேண்டும்.
மாணவர்கள் அனைவரையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் சேர்க்க வேண்டும் என, நேர வரம்பு எதையும் இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயிக்கவில்லை என, அதன் வக்கீல் தெரிவித்துள்ளார். அப்படியென்றால், மாலை 5 மணிக்குப் பின், மனுதாரரை ஏன் கல்லூரியில் சேர்க்கவில்லை? அதுவும் மாலை 5 மணிக்குப் பின், நிர்வாக ஒதுக்கீட்டில் எட்டு பேரை சேர்த்துள்ளனர். மனுதாரர் இடத்திலும் ஒருவரை சேர்த்துள்ளனர். இது உண்மையென்றால், கல்லூரிக்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சில் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை இந்த நீதிமன்றம் தெரிந்து கொள்ள விரும்புகிறது. எனவே, இதுகுறித்து இந்திய மருத்துவ கவுன்சில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அதற்கு முன், இந்திய மருத்துவ கவுன்சில் மனு தாக்கல் செய்யவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரி நேரில் ஆஜராக, நாங்கள் உத்தரவிடுவோம். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்:மருத்துவ சீட்
Karthi Chidambaram Feels CM karunanadhi
பாரதியார் தமிழோடு தேசியத்தையும் வலியுறுத்தினார். அவரது கவிதைகளில் தேசியம்தான் மிளிர்கிறது. ஆனால், தமிழகத்தில் தமிழ் உணர்வு உள்ளவர்கள், தமிழைப் பற்றி பேசுபவர்கள் தேசியத்தை வலியுறுத்துவதில்லை. அதுமட்டுமல்ல, தேசியம் பற்றிய பேசினால் தமிழுக்கு விரோதி என்பது போல சித்திரிக்கிறார்கள். தமிழகத்தில் மாநிலக் கட்சிகள் தேசியக் கொடியேற்றி யாராவது பார்த்தது உண்டா? தமிழ், ஈழம் இந்த இரண்டையும் பற்றி பேசினால்தான் தமிழ் உணர்வாளர் என்பது போன்ற தோற்றம் இங்கே ஏற்பட்டுள்ளது.
தமிழ் உணர்வு பற்றி பேசுபவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். தமிழையும், ஆன்மிகத்தையும் யாரும் பிரிக்க முடியாது. கடவுளை கேலி செய்வது தமிழகத்தில் நாகரிகமாகிவிட்டது. ஆனால், மேடையில் நாத்திகம், வீட்டில் ஆத்திகம் என வாழ்பவர்கள்தான் இங்கு அதிகம். மக்கள் சரியாக இருந்தால்தான் அரசியல்வாதிகள் சரியாக இருப்பார்கள். விலை மதிக்க முடியாத வாக்குரிமையை விற்கும் மக்கள் இருக்கும் நாடு எப்படி வளரும்?
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்தால் எதிர்காலத்தில் ஜாதி கட்சிகள் பெருகும். ஒவ்வொரு ஜாதியினரும் தங்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு கேட்பார்கள். இதனால் மிகப்பெரிய அரசியல், சமுதாயப் பிரச்சினைகளை இந்தியா சந்திக்கப் போகிறது. நான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன் என்பதற்காக கட்சி எடுக்கும் எல்லா முடிவுகளையும் ஏற்க முடியாது.
தமிழகம் இன்று சினிமா மாயையில் சிக்கித் தவிக்கிறது. சினிமாவில் வரும் டாக்டரிடம் நாம் சிகிச்சை பெறுவதில்லை. சினிமாவில் வரும் வழக்கறிஞர்களை வாதாட அழைப்பதில்லை. ஆனால், திரையில் வரும் நாயகர்களை நாடாள அழைக்கிறோம். சினிமாவுக்கு அப்பாற்பட்ட தலைமையே இன்றைய தமிழகத்துக்குத் தேவை.
அரசியல் வளையத்துக்கு வெளியே சென்று எந்தக் கருத்தையும் தமிழகத்தில் சொல்ல முடியவில்லை. ஒரு கருத்தைச் சொன்னால் கூட்டணிக் கட்சியினர் கோபித்துக் கொள்வார்களோ, எங்கள் கட்சியிலேயே மற்ற கோஷ்டியினர் காலை வாரிவிட்டு விடுவார்களோ என்று பயப்படும் நிலை உள்ளது. எனக்கு அந்தக் கவலை இல்லை. ஏனென்றால் நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பேசினார்.
முற்போக்கு சிந்தனையாளர் பேரவைத் தலைவர் தாம்பரம் நாராயணன், டி.கே.எஸ். கலைவாணன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் நந்தலாலா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே. சிரஞ்சீவி, முன்னாள் எம்.எல்.ஏ. பலராமன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். முன்னதாக விழாவில் தமிழறிஞர்கள் ரா.அ.பத்மநாபன், சீனி. விஸ்வநாதன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்
Karthi Chidambaram Feels CM karunanadhi
Best Photos of 2010
Juarez Mayor Jose Reyes Ferriz, presides over an empty city hall parking lot during the celebration of "El Grito". Mexico was celebrating the bicentennial of its fight for independence but due to rampant and out of control violence in the city, he decided to televise the event and not allow the public to congregate in the area.
San Antonio Spurs George Hill is fouled by Phoenix Suns Channing Frye in the first half of game 3 of seven series in the Western Conference Semifinals
Linda Boubel carries Teka after it was rescued from her brother-in-laws house by San Antonio firefighters
Angelita Lopez, 85, places the crown on a four-foot icon of Our Lady of Fatima during its arrival at Our Lady of Perpetual Help
Bowler Helen Borosh high-fives Edna Stappenbeck as she celebrates her 98th birthday with a cake and members of the Golden 55 Senior Bowling League at the AMF Country Lanes
Best Photos of 2010
Egypt church at New Year's Mass, 7 dead- 1.1.2011
Nearly 1,000 Christians were attending the Mass at the Saints Church in the Mediterranean port city of Alexandria, said a priest at the church, Father Mena Adel. The service had just ended, and worshippers were leaving the building when the blast went off, about a half-hour after midnight.
"I was inside the church and heard a huge explosion," Adel told The Associated Press. "People's bodies were in flames."
The blast came from a car parked outside the church, but police said they were still investigating whether the car had been rigged with explosives or if a bomb had been placed under it. Witnesses reported seeing the charred chassis of the destroyed car, with the remains of several bodies nearby and dozens wounded.
The Interior Ministry said in a statement that seven people were killed and 24 wounded. Alexandria's governor, Adel Labib, put the death toll as high as 10.
There was no immediate claim of responsibility for the blast. Labib immediately blamed al-Qaida, pointing to recent threats by the terror group's branch in Iraq to attack Christians. It was not clear, however, if Labib had firm evidence, and he may have intended more to deny any homegrown Muslim-Christian tensions in Egypt.
"The al-Qaida organization threatened to attack churches inside Egypt. This has nothing to do with sectarianism," he told TV.
Egypt church at New Year's Mass, 7 dead- 1.1.2011
Actor Vikram : Selvaragavan to Suseendiran
"சிந்துபாத்" திரைபடத்தின் தயாரிப்பாளர் இந்த படத்திற்கு பதிலாக விக்ரம் நடிக்க சுசிந்திரன் இயக்க ஒரு படத்தை தயாரிக்க எண்ணியுள்ளார் .அநேகமாக அந்த படம் சுசிந்திரன் தனது "அழகர் சாமியின் குதிரை" மற்றும் விகரம் தனதின் "தெய்வமகன்" படங்களை முடித்த பிறகு படபிடிப்பு தொடங்கும் என எதிர்பார்கபடுவதாக தெரிவிக்கிறது தகவல் .
Actor Vikram : Selvaragavan to Suseendiran
Thursday, December 30, 2010
Nayantharavin Kuthuuu.........
Nayantharavin Kuthuuu.........
நடிகர் விஜயின் Kavalan பெரும் சிக்கல் நீடிக்கிறது.
நடிகர் விஜயின் Kavalan பெரும் சிக்கல் நீடிக்கிறது.
நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தாDec31.2010
நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தாDec31.2010
நடிகர் விஜயின் " கோபம்" | Actor Vijay's "Kobam"
தம்பி படத்தை அடுத்து வாழ்த்துகள் படத்தை இயக்கினார் சீமான். கடந்த ஓராண்டு காலமாகவே சூடான பேச்சு நாளொரு போராட்டமும், பொழுதொரு அறிக்கை என அலையும் சீமான். என்னுடைய படத்தில் விஜய் நடிப்பது உறுதி எனக் கூறியுள்ளார். மேலும் படத்திற்கு பகலவன் என பெயரிடப்பட்டது. ஆனால் சீமான் படத்திற்கு பகலவன் தலைப்பை வைக்க விரும்புவில்லை. பகலவன் என்ற பெயரைவிட 'கோபம்' என்ற டைட்டிலே இப்போதைக்கு சரியாக இருக்கும் என சீமான் யோசிக்கிறாராம். இதற்கு விஜய்யும் ஒப்புதல் அளித்துள்ளாராம். படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளார்.
நடிகர் விஜயின் " கோபம்" | Actor Vijay's "Kobam"
Chidambaram Concerned adove CRPF
Chidambaram Concerned adove CRPF
Captancy Longer Deal For Me :Ganguly
Captancy Longer Deal For Me :Ganguly
Durban 2ndInnings Carreer BestRanking Laxman,Zaheer
Durban 2ndInnings Carreer BestRanking Laxman,Zaheer
வனிதா விஜயகுமார் விரைவில் அரசியல் பிரவேசம்!
வனிதா விஜயகுமார் விரைவில் அரசியல் பிரவேசம்!
பில்லா - 2 (2011 ) பற்றி சில விஷயங்கள் | Something About Billa-2 (2011)
பில்லா - 2 (2011 ) பற்றி சில விஷயங்கள் | Something About Billa-2 (2011).
'சர்வம்'
படத்துக்கு பின் நீண்ட இடைவெளி விட்டிருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.
இதில் சில கதைகளை எழுதியிருக்கிறார். அடுத்து சரித்திர படத்தை இயக்கும்
முயற்சியில் இருந்தாலும் 'பில்லா 2' கதையும் உருவாக்கி வைத்துள்ளாராம்.
ஏற்கனவே 'பில்லா 2' இயக்க பேச்சு நடந்தது. அதன் பின் அப்படம் உருவாகுமா
என்பது முடிவாகவில்லை. 'அஜீத் மேல எனக்கு தனி மரியாதை இருக்கு. 'பில்லா 2'
இயக்க அவர் எப்போ கூப்பிட்டாலும் ரெடியா இருப்பேன்' என்றார் விஷ்ணு.
பில்லா
2 படத்தை தொடங்க அஜீத்தும் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளாராம். மங்காத்தா
முடிந்த பிறகு அ*ஜீத் பில்லா 2 வில் நடிக்கிறார். இதுதான் அவரது 51வது
படம் என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. பில்லாவில் பணிபு*ரிந்த
தொழில்நுட்பக் கலைஞர்கள்தான் பில்லா இரண்டாவது பாகத்திலும்
பணிபு*ரிகிறார்கள்.
இசைக்கு யுவன், கேமராவுக்கு நீரவ்ஷா. முந்தைய
பாகத்தைப் போலவே இதற்கும் காஸ்ட்யூமுக்கு கணிசமான தொகை செலவு செய்ய
முடிவெடுத்துள்ளார்கள்.
பில்லா - 2 (2011 ) பற்றி சில விஷயங்கள் | Something About Billa-2 (2011)
முருங்கைப்பூவின் மருத்துவ குணங்கள்!
வைக்கின்றனர்.
முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.
சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.
இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.
இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.
முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன.
வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.
கண்களைப் பாதுகாக்க:
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.
ஞாபக சக்தியைத் தூண்ட:
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சினைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும். இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
பித்தம் குறைய:
மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க:
அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும். முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு:
கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று, நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
பெண்களுக்கு:
சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கஷாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.
தாது புஷ்டிக்கு:
ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.
முருங்கைப்பூவின் மருத்துவ குணங்கள்!
SiddhaVaithiyam :ஈரலை பலப்படுத்த..
இதனை மணல்கீரை, நாவமல்லிக்கீரை என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.
Tamil - Manali Keerai
Malayalam - Manalik kira
Sanskrit - Valuka
Telugu - Isuka dasari kura
Botanical Name - Gisekia pharnaceoides
இதன் இலை தண்டு அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. நம் முன்னோர்களின் மருத்துவக் கீரைகளில் மணலிக் கீரையும் இடம்பெற்றுள்ளது.
வயிற்றுப் பூச்சி நீங்க:
வயிற்றில் கிருமிகள் இருந்தால் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் இவை உறிஞ்சி விடுவதால், உடல் பலவீனமடைந்து காணப்படுவார்கள். பெரும்பாலும் சிறு குழந்தைகள் தான் இந்த வயிற்றுப் பூச்சியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும் வயிற்றுப்புண், குடல்புண், அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படுவதற்கு இவை காரணமாகின்றன. இந்த வயிற்றுப் பூச்சிகளுக்கு மருந்துகள் சாப்பிட்டாலும் முழுமையாக ஒழிந்துவிடாது. இவை முற்றிலும் அறவே நீக்க மணலிக் கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கலந்து கூட்டு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சி நீங்கும்.
மார்புச்சளி போக்க:
சளியின் அபகாரம் அதிகரித்து அது மார்பு பகுதியில் சேர்ந்து சளி கட்டிக்கொள்வதால் தொடர்ந்து இருமல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. இந்த மார்புச் சளியை போக்க, மணலிக்கீரையை நன்கு நீர்விட்டு அலசி பின் அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும். அல்லது மணலிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும்.
மலச்சிக்கல் நீங்க:
பொதுவாக கீரைகள் அனைத்துமே மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக மணலிக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி வாரம் இருமுறை பாசிப்பருப்பு கலந்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
ஞாபக சக்தியைத் தூண்ட:
ஞாபக மறதி மனிதன் வாழ்வை சீரழிக்கும் நோய். ஞாபக மறதிக்கு பித்த அதிகரிப்பே காரணம். மேலும் மூளைக்கு தேவையான சத்துக்கள் குறைவதால் ஞாபக மறதி உண்டாகும். இக்குறையை நீக்க மணலிக் கீரை மசியல் செய்து சாப்பிடுவது நல்லது.
குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் நீங்க:
மணலிக் கீரையின் சமூலத்தை நீர்விட்டு அரைத்து 70 கிராம் அளவாக எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் அருந்தி விட்டு மறுபடியும் நான்கு நாள் இடைவெளிவிட்டு மூன்று நாட்கள் அருந்தி வந்தால் குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் நீங்கும்.
பைத்தியம் மாற:
மூளை பாதிப்புள்ள குழந்தைகளுக்கு மணலிக் கீரையை மசியல் செய்து கொடுத்தால் மூளை நரம்புகள் நன்கு பலம் பெறும். இதனால் பைத்தியம் குணமாக வாய்ப்புண்டு.
ஈரல் பலப்பட:
ஈரல் பாதிக்கப்பட்டாலே உடலின் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும். இரத்தம் சீர்கெடும். கண்பார்வை கோளாறுகள் உண்டாகும். ஈரலைப் பலப்படுத்த மணலிக்கீரை கசாயம் செய்து அருந்தி வரவேண்டும்.
மணலிக் கீரையை குடிநீரில் கொடுக்க மார்புச் சளி, வயிற்றுப்புண் நீங்கும்.
மணலிக்கீரை கிடைக்கும் காலங்களில் வாங்கி உண்டு அதன் முழு மருத்துவப் பயனை பெறுங்கள்.
SiddhaVaithiyam :ஈரலை பலப்படுத்த..
நயன்தாராவும்,பிரபுதேவாவும்,வாழ்த்திய நெஞ்சங்களும்
ஒரு பக்கம் ரம்லத்தின் விவாரத்து அறிவிப்பு, இன்னொரு பக்கம் அனைத்து வழக்குகளும் வாபஸ் என அடுத்தடுத்து 'எதிர்ப்பார்த்த திருப்பங்கள்' அரங்கேற, இனி தனக்கும் பிரபுதேவாவுக்கும் குறுக்கே யாரும் வரமுடியாது என்ற சந்தோஷத்தில் மிதக்கிறாராம் நயன்தாரா.
இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள இந்தப் புத்தாண்டில் ஹைதராபாத் நகரில் பெரும் விருந்து தரப் போகிறாராம் நயன்தாரா.
தனக்கு எல்லாமாக இருந்து வழிகாட்டிய பிரகாஷ்ராஜ் மற்றும் போனி வர்மா தம்பதிகளை கவுரவிக்கும் வகையில், இந்த பார்ட்டியையே அவர்களுக்கு அர்ப்பணிக்கப் போகிறாரார்களாம் பிரபு தேவாவும் நயனும்.
முக்கியமாக, தங்கள் திருமண விஷயத்தை மீடியாவில் கொளுத்திப் போட்டதோடு, சிறந்த ஜோடி (திருமணத்துக்கு முன்பே) விருது கிடைக்கவும் காரணமாக அமைந்த அந்த பெண்மணிக்கும் இந்த விருந்தில் உரிய மரியாதை உண்டாம்.
தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, இந்திப் பட உலகில் தங்களுக்கு மிக நெருக்கமான சிலரை மட்டும் இந்த விருந்துக்கு அழைத்துள்ளனராம் பிரபு தேவாவும், நயனும்.
நயன்தாராவும்,பிரபுதேவாவும்,வாழ்த்திய நெஞ்சங்களும்
சென்னை சுற்றுப்பயணத்தின்போது அடையாறு பூங்காவை பிரதமர் திறக்கவில்லைDec31.2010
சென்னை சுற்றுப்பயணத்தின்போது அடையாறு பூங்காவை பிரதமர் மன்மோகன் சிங் திறக்கவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவை திறந்துவைப்பதற்காக பிரதமருக்கு தமிழக அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மைக் குழுமம் இந்தப் பூங்காவை அமைப்பதற்கான தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு ஏற்கனவே அனுப்பியிருந்தது. ஆனால், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் தற்பொழுதுவரை பெறப்படாததால் பாரதப் பிரதமர் ஜனவரி 3-ந் தேதி இந்திய அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதாக சென்னைக்கு வரும்பொழுது, பூங்கா திறப்பு நிகழ்ச்சியை சேர்க்க இயலவில்லை. எனவே, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்கப்பெற்ற பின்பு, இந்த பூங்கா திறந்து வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை சுற்றுப்பயணத்தின்போது அடையாறு பூங்காவை பிரதமர் திறக்கவில்லைDec31.2010
வீரபாண்டி ஆறுமுகத்தை பார்த்தால் பாவமாக இருக்கிறது: இளங்கோவன்Dec30.2010
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் என்னைத் தாக்கியும், சிறிதும் நாகரீகம் இன்றி மறைந்த என்னுடைய தந்தையாரை வம்புக்கிழுத்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து எனக்கு அவர் மீது உள்ள அக்கறையால் ஐயோ! பாவம்! என்றுதான் தோன்றியது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
சமீபத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து வீரபாண்டி ஆறுமுகம் அறிக்கை விடுத்திருந்தார். இதற்குத் தற்போது இளங்கோவன் பதிலளித்துள்ளார். காங்கிரஸ் 126வது தொடக்க விழா மற்றும் வாசன் 46வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் சார்பில், அதன் தலைவர் தணிகைமணி தலைமையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில், அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு 100 மெத்தைகள் வழங்கும் விழா நடந்தது. இதில் இளங்கோவன் பேசியதாவது:-
மூப்பனார் மகன் என்பதால் மட்டும் வாசனுக்கு கட்சியிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்கு வரவில்லை. வாசனுக்கு எம்.பி., பதவி தர வேண்டுமென்று கூறிய போது அதை மறுத்தவர் மூப்பனார். இன்றோ தன் மகனை முதல்வராக்க துடிக்கும் தலைவரும் நம் நாட்டில் உள்ளார். கட்சியில் உள்ள வயதானவர்களை வாசன் சமாளிப்பது தான் எனக்கு அவரிடம் பிடித்த காரியம். ஏனெனில், எங்கள் கட்சியில் உள்ள பெரியவர்கள் ஒரு மாதிரியானவர்கள். அவர்களை நிச்சயம் என்னால் அரவணைத்து செல்ல முடியாது. நாட்டின் பெரிய தலைவர்கள் பலர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்துக் கொண்டனர்.
தமிழக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் என்னைத் தாக்கியும், சிறிதும் நாகரீகம் இன்றி மறைந்த என்னுடைய தந்தையாரை வம்புக்கிழுத்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து எனக்கு அவர் மீது உள்ள அக்கறையால் ஐயோ! பாவம்! என்றுதான் தோன்றியது.
பெரியவர் ஆறுமுகம் இப்போது பொதுவாழ்விலும், அவர் சார்ந்திக்கிற கட்சியிலும் இறங்கு முகமாக உள்ளார். அதைச் சரிகட்ட என்னை கொச்சைப்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தருவதை நான் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார். எப்படி என எனக்குத் தெரியவில்லை.
என்னுடைய உயிரைப்பற்றி எப்போதும் கவலை கொள்ளாதவன் நான். அதற்காக பதவியைப் பயன்படுத்தி மக்களின் நல்வாழ்வை பாழாக்குகின்றவர்களை தட்டிக்கேட்கும் கடமையிலிருந்து நான் எக்காலமும் தவற மாட்டேன். காங்கிரஸ் பேரியக்கத்திற்கு எது நல்லதோ அதைத் தொடர்ந்து செய்வேன். கோடானு கோடி காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை யாருக்கும் அஞ்சாமல் தொடர்ந்து சொல்வேன்.
அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமைக்கும் குறிப்பாக அருமை அன்னை சோனியா காந்திக்கும் கட்டுப்பட்டவனாக என்றும் இருப்பேன் என்பதோடு, பெரியவர் ஆறுமுகம் போன்றவர்களின் மிரட்டலையும், அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள எப்பொழுதும் தயாராகவே உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வீரபாண்டி ஆறுமுகத்தை பார்த்தால் பாவமாக இருக்கிறது: இளங்கோவன்Dec30.2010
குழந்தை வளர்ப்பு:வயிற்றுப்போக்கு கவனிக்காவிட்டால்...!
வீட்டில் சிகிச்சை:
சிறிய அளவில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், வீட்டு சிகிச்சையிலே அதை சரி செய்திட முடியும். "ஓ.ஆர்.எஸ்" திரவத்தையோ, உப்பு சேர்த்த கஞ்சி நீரையோ அடிக்கடி கொடுக்கவேண்டும். இளநீரும் கொடுக்கலாம். அரிசி வகை உணவுகள் விரைவாக ஜீரணமாகும் என்பதால் தோசை, இட்லி போன்றவைகளையும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். கோதுமை- பொடி அரிசி கஞ்சி, சூப் போன்றவைகளும் கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு இருந்தால் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். வாந்தியும் இருந்தால் கொதித்து ஆற வைத்த நீரைப் பருகக் கொடுக்க வேண்டும். அப்போது பருகுவதற்கு ஜூஸ் கொடுக்கக்கூடாது.
சோர்வை நீக்க:
வயிற்றுப்போக்கு தொடரும்போது குழந்தைகளுக்கு சோர்வு தோன்றும். அப்போது வாந்தியும் ஏற்பட்டால் சோர்வு அதிகரிக்கும். "ஓ.ஆர்.எஸ்" திரவம் சோர்வை நீக்கவும் பயன்படும். நீண்ட நாட்கள் வயிற்றுப்போக்கு இருந்துகொண்டிருந்தால், குழந்தைகளின் உடல் எடை குறையத் தொடங்கும். வயிற்றுப்போக்கு நின்ற பிறகு அவைகளுக்கு பசி அதிகரிக்கும். அதற்குத் தக்கபடி உணவு கொடுக்கத் தொடங்கினால் உடல் எடை அதிகரித்துவிடும்.
"ஓ.ஆர்.எஸ்" திரவம் கொடுக்கும் நிலை ஏற்பட்டால், மெடிக்கல் ஷாப்களில் பாக்கெட்டுகளில் கிடைக்கும் தரமானவற்றை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ஒரு பாக்கெட்டைத் திறந்து விட்டால் அதை 24 மணிநேரத்துக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் ஒரு கப் நிறைய பருக கொடுக்கக்கூடாது. ஒரு கப் திரவத்தை மூன்று அல்லது நான்கு தடவையாக கொடுக்க வேண்டும். ஆனால் வீட்டு சிகிச்சை மூலமாக மட்டுமே வயிற்றுப்போக்கைக் குணப்படுத்த முடியாது. பாதிப்பு அதிகரிப்பதாகத் தெரிந்தால், உடனடியாக ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுவிட வேண்டிய நிர்பந்தம்:
* குழந்தைக்கு தளர்ச்சி தோன்றினால்.
* குழந்தையின் வாய் வறண்டு, உலர்ந்துபோனால்
* சிறுநீர் கழிக்கும் தடவை குறைந்துபோனால்
* சருமத்தின் நெகிழ்வுத்தன்மை குறைந்தால்
* நிறுத்தாமல் அழுவது, அழும்போது கண்ணீர் வராமல் இருப்பது
* மலத்தில் ரத்தமும், சளியும் வெளியேறுதல்
* வயிற்றுப்போக்கோடு கடுமையான காய்ச்சல் ஏற்படுதல்
* வயிறு வீங்கிப்போதல்
* அடிக்கடி மலம் வெளியேறுதல்
சிறிய அளவிலான வயிற்றுப்போக்கு என்றாலும், ஒரு வாரத்திற்கு மேல் நீண்டு போகுதல்.
வயிற்றுப்போக்கு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை:
* கைக் குழந்தைகளுக்கு முடிந்த அளவு தாய்ப்பால் மட்டுமே கொடுங்கள். அதுதான் பாதுகாப்பானது.
* பால் பொடியை கலக்கி கொடுக்க பயன்படுத்தும் நீர், நன்கு கொதித்ததாக இருக்க வேண்டும்.
* பாதி அளவு பாட்டில் பாலை பருகிவிட்டு, மீதியை அடுத்த நேரத்திற்கு வைத்து கொடுக்கக்கூடாது.
* குழந்தைகளுக்கான உணவு தயாரிக்கும் பாத்திரங்கள், வென்னீரில் நன்றாகக் கழுவப்பட வேண்டும்.
* குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதற்கு முன்னதாக உணவு ஊட்டுபவர்கள் தங்கள் கைகளை நன்றாகக் கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
* குழந்தைகளுக்குக் கொதித்து ஆறிய நீரை மட்டுமே பருகக் கொடுக்க வேண்டும்.
* பள்ளிக்குச் செல்லும் சிறுவர்-சிறுமியர்களை பள்ளி அருகில் உள்ள கடைகளில் எந்த உணவும் வாங்கி சாப்பிட ஊக்குவிக்கக்கூடாது.
* அவ்வப்போது தயாரிக்கும் உணவுகளை மட்டும் குழந்தைகளுக்கு சாப்பிட அனுமதியுங்கள்.
* உணவு சாப்பிடும் முன்பு கைகளை கழுவி சுத்தம் செய்யும் பழக்கத்தை குழந்தைகளிடம் உருவாக்குங்கள்.
குழந்தை வளர்ப்பு:வயிற்றுப்போக்கு கவனிக்காவிட்டால்...!
அழகு குறிப்புகள்:பொட்டு முதல் புடவை வரை உடலுக்கு பிடிச்சிருக்கணும்!
அழகு என்ற எல்லையற்ற விஷயத்தை ஒல்லி குண்டு, குள்ளம், வளர்த்தி, கருப்பு, சிவப்பு என்ற வட்டங்களுக்குள் சுருக்கிப் பார்ப்பது அபத்தம்.
ஒவ்வொருவரின் ரசனைக்கேற்ப அழகுக்கான அர்த்தங்களும் வரைமுறைகளும் மாறுபடுகிறதே தவிர உண்மையில் அழகின்மை என்ற ஒன்று கிடையவே கிடையாது. ஒல்லிக்குச்சி உடம்பு, சிவந்த நிறம், நீளமுடி, அகன்ற விழிகள், படபடக்கும் இமைகள்....
இப்படியான ஃபார்முலாக்கள் யாரோ சிலரால் உருவாக்கப்பட்டவை.
ஏனென்றால் இதுதான் "பெர்ஃபெக்ட் அழகு என யாரையும் சுட்டிக் காட்ட முடியாது. பட்டை தீட்டத் தீட்டத்தான் வைரம் ஜொலிக்கும் என்பது போல், ஒவ்வொரு உடலிலும் முகத்திலும் உள்ள குறைகளை சற்றே மட்டுப்படுத்தி, நிறைகளை ஏற்றிக் காட்டுவதன் மூலம் பளிச்சென்ற தோற்றத்தை எல்லோருமே பெற முடியும்.
கருப்பு நிறத்தில் இருக்கும் உங்களுக்கு அடிக்கிற ஆரஞ்ச் ஃபேவரிட் கலராக இருக்கலாம். அந்த நிறத்தில் உடை அணிந்தால் பொருந்துமா? சின்னக் கண்களை கொண்ட உங்களுக்கு கண் மை இட்டுக் கொள்வது பிடித்தமான விஷயமாக இருக்கலாம். ஆனால் கொஞ்ச நேரத்தில் கன்னம் வரை வெளியே வந்து முகத்தை அசிங்கப்படுத்திவிடுமே....
இந்த மாதிரி மேக்-அப் பற்றி பரவலாக இருக்கும் தவறான புரிதல்களை தெளிவுபடுத்துகிறார் அழகுக்கலை நிபுணர் வசந்தி சுந்தரம். "நம்மை, நம் உடலை நேசிக்க வேண்டும். அப்போதுதான் அலங்காரத்தின் மீது ஈடுபாடு வரும்" என்று சொல்லும் வசந்தி, யார் எப்படி அலங்காரம் செய்து கொள்ளலாம் என்று டிப்ஸ்களை அள்ளி வழங்கியிருக்கிறார். 15 வருடங்களாக மணப்பெண் அலங்காரம், மாடல்களுக்கு மேக்-அப், அழகுக் கலைப் பயிற்சி..... என்று இந்தத் துறையில் ஊறிப்போனவர். அனுபவங்களிலிருந்து சில அரிய விஷயங்களை சொல்லித் தருகிறார்.
மேக்-அப்பை பொறுத்தவரை அது உடலுக்கு ஏற்ற மாதிரி மட்டும்தான் இருக்கவேண்டும். "மனசுக்கு அதுதான் பிடிச்சிருக்கு" என்று பிடிவாதம் பிடித்தால் உங்கள் அழகே போய்விடும். ஆக, மனதின் விருப்பத்தை ஒதுக்கி வைத்துவிடுவது நல்லது. "பொட்டு முதல் புடவை வரை இதுதான் எனக்கேற்றது" என்று கண்டறிய முடிந்தவர்கள். நிச்சயம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைப்பார்கள். அந்த வித்தையை கற்க உங்களுக்கு உதவவே இந்த இணைப்பு.
கண்:
சென்சிடிவான பாகம் கண் ஆகும். தூக்கமின்மை, கடின உழைப்பு, சத்துக்குறைவு, கண்களுக்கு அதிக வேலை.... இவற்றால் கருவளையம் வந்து கண் அதன் ஜீவனையே இழந்துவிடும்.
* கண்களுக்கு நிறைய ஓய்வு கொடுங்கள்.
* குறைபாடுகள் இருந்தால் உடனே பரிசோதித்து உரிய சிகிச்சை பெறுங்கள். பார்வை பாதித்தால் வயதான தோற்றம் தருமே என்று கண்ணாடி போடாமல் இருக்காதீர்கள். கண்ணாடியும் அழகுதான். வட்ட முகத்துக்கு மெல்லிய சிறிய சதுர வடிவ கண்ணாடி பொருத்தமாக இருக்கும். ஓவல் முகத்துக்கு சற்று அகலமான சதுர கண்ணாடி பொருந்தும். நீள முகத்துக்கு வட்ட கண்ணாடி பொருந்தும்.
* கண்களை சிறிதாகவும் பெரிதாகவும் மாற்றிக் காட்ட ஐலைனர் பயன்படுத்துங்கள்.
* பெரிய கண் உள்ளவர்கள் மெல்லிய கோடாகவும், சிறு கண் உடையவர்கள் அழுத்தமாகவும் ஐலைனர் போடவேண்டும்.
* விழி துருத்திக் கொண்டு இருப்பது போல் தோற்றம் உள்ளவர்கள் பழுப்பு நிற ஐஷேடோ பயன்படுத்தலாம்.
* கருமையான விழி உடையவர்கள் புருவத்துக்கும் இமைக்கும் நடுவில் சாக்லெட், நீலம், பச்சை நிற ஐஷேடோ பயன்படுத்தலாம்.
புருவம்:
முகத்தின் ஒட்டு மொத்த அழகைக் காட்டுவதில் புருவத்துக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். வில் போன்ற புருவம், அடர்த்தியான புருவம், தடிமனான புருவம், கீற்று போன்ற புருவம் என்று வகைப்படுத்தி கூறலாம். முகத்துக்கு ஏற்ப, கண்களுக்கு ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்து கொள்ளுங்கள்.
* குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம் இருக்கட்டும்.
* நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக இடைவெளி தேவையில்லை.
* ஓவல் முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன் இருந்தால் வசீகரமாக இருக்கும்.
* அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள்.
* புருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள் சிறிதாக தெரியும்.
* சதுர முகம் உள்ளவர்கள் பெரிய வளைவாக பிறை வடிவில் மாற்றிக் கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும்.
* புருவத்தின் முடிவு மிகவும் கீழ் நோக்கி இருந்தால் வயதான தோற்றம் தரும். மாற்றிக்கொள்ளுங்கள்.
* கருப்பு நிறம், அழகிய முகம் உள்ளவர்கள் புருவத்தை சரி செய்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.
* வட்ட முகம் உள்ளவர்கள் புருவம் கீழ் நோக்கி வருவதுபோல் அமைத்துக் கொள்ளவும்.
* நீண்ட, ஓவல் முகம் உள்ளவர்கள் சிறிய புருவத்தை அமையுங்கள்.
* நீளமூக்கு உள்ளவர்களுக்கு புருவம் தழைத்தே இருக்கட்டும். தினம் விளக்கெண்ணெய் தடவுங்கள். முடி நன்றாக வளரும்.
* வீட்டிலேயே புருவத்தை சீர் செய்பவர்கள் பிளேடால் எடுக்காதீர்கள். அதிகமாக வளர ஆரம்பித்துவிடும். எதிர்த்திசையில் எடுத்தால் முரட்டுத்தனமாக வளரும். அடுத்த முறை நூலினால் எடுக்கும்போது அந்த இடத்தில் ஆழப்புள்ளி உண்டாகலாம்.
* உடைக்கு மேட்சான நிறத்தில் ஐ ஷேடோ எடுங்கள். கண்களை மூடி புருவம் மீது ப்ரஷ்ஷால் தடவுங்கள்.
காதணி:
சில பெண்கள் அழகான உடை உடுத்தி இருப்பார்கள். அருகில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும், அவர்களின் காதுகள் சுத்தமில்லாமல் இருப்பது. தினமும் காதுகளை அழுந்த தேய்த்து சுத்தப்படுத்துங்கள். காது அமைப்பில் வித்தியாசம் இருக்கலாம். அதை காதணிகள், மேக்கப்பினால் சரி செய்து கொள்ளலாம்.
* நீளக் காது என்றால் ஃபவுண்டேஷன் போட்டு சிறிதாக காட்டலாம். விதவிதமான காதணிகளால் அலங்கரிக்கலாம்.
* காதின் கீழ் விளிம்பு அகலமாக இருந்தால் பட்டையாக நிறைய கல் வைத்த பேசரி தோடுகளை போட்டுக் கொள்ளுங்கள்.
* சின்ன காது என்றால் காது மடல்களில் 2, 3 துளை போட்டு சின்னச் சின்ன வளையங்களை மாட்டி, காது விளிம்பில் கல் பதித்த சரம் போன்ற தோடு அல்லது தொங்கட்டான் போடலாம்.
* குண்டு முகத்துக்கு தொங்கட்டான் வேண்டாம். காதோடு ஒட்டின டிசைன் தோடு எடுப்பாக இருக்கும்.
* கழுத்தில் மெலிதான செயின் என்றால் காதணியை சற்று பெரிதாக அணிந்து கொள்ளுங்கள்.
* காதோரம் குட்டிக் குட்டித் தோடுகள் அழகாக இருக்கும்.
* அகலமான முகம் உள்ளவர்கள் நீள தொங்கட்டான்கள், ஒன்றின்கீழ் ஒன்று வரும் குடை ஜிமிக்கிகள், பெரிய வளையங்கள் போடலாம். கழுத்து நீளம் குறைவென்றால் காதணி நீளத்தை குறைக்கவும். காது மடல்களில் அணியும் தோடுகள், குட்டி தொங்கட்டான்கள், வளையங்கள் முக அழகை கூட்டும். விழாக்களுக்கு செல்லும்போது அகலமான மாட்டல், கல் வைத்த குண்டு ஜிமிக்கி, பட்டை நெக்லஸ் போட்டுக்கொண்டு பட்டையை கிளப்புங்க.
மூக்கு:
* நீண்ட, சப்பை, குடமிளகாய் வடிவங்களில் உள்ளது மூக்கு. அதனை மாற்ற முடியாது என்றாலும் மூக்குத்தி போட்டு ஓரளவு அழகாக்கலாம்.
* கல் இல்லாத வெறும் மூக்குத்தி எந்த முகத்துக்கும் அழகாக பொருந்தும்.
* சிவப்பாக உள்ளவர்களுக்கு பச்சைக்கல் மூக்குத்தி எடுப்பாக இருக்கும். மாநிறம் உள்ளவர்கள் சிவப்புக்கல் மூக்குத்தி, கருப்பு நிறமானவர்கள் வெள்ளைக்கல் மூக்குத்தி போட்டால் அம்சமாக இருக்கும்.
* குறுகிய, நீண்ட முகம் உள்ளவர்களுக்கு ஒரு கல் மூக்குத்தி. அகல முகம் உள்ளவர்களுக்கு கற்கள் பதித்த அகன்ற மூக்குத்தி பொருந்தும்.
உதடு:
மனதின் ஜன்னல் கண்கள் என்றால், உதடு அதன் மேடை என்பார்கள். மெல்லிய, தடிமனான, சொப்பு என உதடுகளின் அமைப்பு, நிறம் ஆகியவற்றை பொருத்து லிப்ஸ்டிக் பூசி மேலும் அழகாக்குங்கள்.
* முகத்துக்கு ஏற்ற மாதிரி இல்லாமல் சிறிதாக சொப்பு போன்ற வாய் உள்ளவர்கள் லிப்ஸ்டிக்கை உதடுகளின் இரு முனைகளிலும் சற்று அதிகப்படியாக பூசுங்கள். வாய் சற்று பெரிதாகத் தெரியும்.
* தடித்த உதடுகள் உள்ளவர்கள் உதட்டுக்கு உட்புறமாக லிப்ஸ்டிக் போடுங்கள். இயற்கை நிற லிப்ஸ்டிக்கை லேசாகத் தடவினால் போதும்.
* மெல்லிய உதடு உள்ளவர்கள் கீழ் உதட்டில் டார்க் நிறமும் லைட் நிறத்தை மேல் உதட்டிலும் பூசுங்கள். பிறகு உதட்டுக்கு வெளியில் பென்சிலால் கோடு போடுங்கள். தடித்த உதடு என்றால் உட்புறமாக போடுங்கள்.
* மாநிற பெண்கள் லைட் ஆரஞ்ச் கலர், கருப்பு நிற பெண்கள் லைட் சிவப்பு, சிவப்பு பெண்கள் லைட் ரோஸ் (பிங்க்) லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.
* உதடுகளின் ஈரப்பசையை நீக்கிவிட்டு லிப்ஸ்டிக் போட்டால் சீக்கிரம் அழியாது.
* காலையில் லைட் கலர் லிப்ஸ்டிக்கும், மாலையில் பளிச் நிறத்திலும் போடுங்கள்.
* ஆடைக்கு ஏற்ற நிறத்தைத் தேர்ந்தெடுத்து போடலாம். டார்க் கலர் போட்டால் வயது அதிகமாக காட்டும். லைட் கலர் கவர்ச்சியாக இருக்கும்.
* வீட்டில் இருக்கும்போது லிப்ஸ்டிக் வேண்டாம். அடிக்கடி உபயோகித்தால் உதடுகள் கருமையாகிவிடும்.
கை, நகம், வளையல்:
அழகான கைகளும், நகங்களும் பார்ப்பவர்களை கவரக்கூடியவை. பொதுவாக பெண்கள் முகத்துக்கு காட்டும் அக்கறையை கைகளுக்கு காட்டுவதில்லை. முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் வயதைக் காட்டினாலும் கைகளில் ஏற்படும் சுருக்கங்கள் அதை அதிகப்படுத்திக் காட்டுவதுடன் பெர்சனாலிட்டியையும் குறைத்துக் காட்டும். பாத்திரம் தேய்க்கும் போதும், துணி துவைக்கும் போதும் தண்ணீர், சோப்பால் கைகள் சொரசொரப்பாக மாறிவிடும். கைகளுக்கு அடிக்கடி ஒயிட் பெட்ரோலியம் ஜெல்லியை தடவிக் கொள்ளுங்கள். கைகள் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* நகத்தால் பாட்டில் திறப்பது, நகத்தை கடிப்பது போன்றவை செய்யாதீர்கள். நகங்களை ஒரே சீராக ஓவல் வடிவில் வெட்டுங்கள்.
* சல்வாருடன் மேட்சிங்கான மெல்லிய கண்ணாடி வளையல்கள் (ஆறு அல்லது எட்டு) அணியலாம்.
* குண்டு விரல்களாக இருந்தால் அணியும் மோதிரங்கள் மெல்லிய கம்பி போன்று இருப்பதும், சிறுகற்கள் கொண்ட நெளிமோதிரமும் அழகு சேர்க்கும்.
* குண்டான கைகளுக்கு மெல்லிய வளையல்கள், மெல்லிய ப்ரேஸ்லெட், மெல்லிய ஸ்டிராப் வைத்த வாட்சுகள் மிகவும் அழகாக இருக்கும்.
உடை:
மற்றதெல்லாம் மனதுக்குப் பிடித்த மாதிரி இருக்கலாம். உடை மட்டும் உடலுக்குப் பிடித்த மாதிரி இருப்பதுதான் அழகு. விரும்பி அணியும் உடைகளை விட உங்களின் நிறம், உயரம், வயது, உடல்வாகு எப்படியோ அவற்றுக்கேற்ப அழகான தோற்றத்தைத் தரும் உடைகளை மட்டுமே தேர்ந்தெடுங்கள்.
குள்ளமானவர்களுக்கான உடை:
புடவை:
கம்பீரத்தையும் கண்ணியத்தையும் கலந்துகட்டி வெளிப்படுத்துவது புடவை மட்டுமே.
* டார்க் கலர்களைவிட வெளிர் நிறங்களே அழகு.
* தலைப்பின் நீளம் குறைவாக இருப்பது நல்லது.
* காட்டன், பேப்பர் சில்க், ஆர்கண்டி, டஸ்ஸர் சில்க் புடவைகளைத் தவிர்க்கவும்.
* கையளவு பார்டர் உள்ள புடவை அணியுங்கள். நேர் கோடுகள் உள்ள ஆடைகளை அணிவதாலும் உயரத்தை அதிகமாக்கிக் காட்டலாம்.
* சாய்வான கோடுகள் உள்ள ஆடை அணியவேண்டாம். இன்னும் குட்டையாகக் காட்டும்.
* இயன்றவரை பிளெய்ன் புடவை, சிறிய பூக்கள் உள்ள புடவை கட்டுங்கள். பேபி பிங்க், லோ வயலட், வெளிர் நீலத்தில் வெள்ளைப்பூக்கள்... இதெல்லாம் ஓகே.
* ஷிபான், ஜார்ஜெட், மைசூர் சில்க், பின்னி சில்க், பிரின்டட் சில்க் டிசைன் புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ரகங்கள். இதில் ஜரிகை ரகங்களை விழாக்களுக்கு அணியலாம். இது காஞ்சிப் பட்டுக்கு ஈடுகொடுக்கும்.
* சின்னச் சின்ன பூக்கள், டிசைன்கள் உள்ளதை எடுங்கள். பெரிய பூக்கள், பெரிய டிசைன் வேண்டாம். சின்ன பார்டர் போதும், அதிக டிசைன் தேவையில்லை.
* குண்டாக இருப்பவர்கள் குஜராத்தி டைப்பில் புடவை உடுத்தவேண்டாம். மேலும் குண்டாக காட்டும். ஒரு பக்க கரை போட்ட புடவை அழகு. இரண்டு பக்க ஜரிகை போட்ட புடவை கட்ட ஆசையாக இருந்தால் சிறிய பார்டர் ஓகே. குள்ளம், பருமனை குறைத்துக் காட்டும். டார்க் நிற உடைகளை அணியுங்கள். ஒல்லியான தோற்றத்தைக் கொடுக்கும். லோ ஹிப் வேண்டாம்.
* ஒல்லியாக சற்று குள்ளமாக இருப்பவர் அழுத்தமான கலர்களில் உடை அணிவதைத் தவிருங்கள். (ஆனால் கருப்பு, மெரூன் போன்றவை யாருக்கும் பொருந்தும்) சின்ன பார்டர் புடவையைத் தேர்ந்தெடுங்கள். கங்கா, யமுனா சேலை போல் ஒரு பக்கம் டிசைன் உள்ள புடவை சற்று பூசினாற்போலவும் உயரமாகவும் காட்டும். பிரைட் டிசைன், பெரிய பூ டிசைன்களை தவிர்த்துவிடுங்கள். புடவைகளில் நீளவாட்டு கோடுகளும், நீள வாட்டு டிசைன்களும் உங்களுக்குப் பொருத்தம்.
சுடிதார்:
வயதை குறைத்துக்காட்டும் டிரஸ் என்றால் அது சுடிதார், சல்வார்-கமீஸ்தான். வயது, உருவ அமைப்பைப் பார்த்து துணி எடுத்துக் கொள்வது நல்லது.
* பிளெய்ன் துணியில் மிகச் சிறிய டிசைன், கழுத்து, ஓரங்களில் மெல்லிய எம்ப்ராய்ட்ரி டிசைன், சைடு ஸ்லிட்டில் டிசைன் அம்சமாக இருக்கும்.
* நீளவாக்கில் கோடு, மெல்லிய கொடி போன்ற டிசைன் உயரமாக காட்டும்.
* ஜரிகை வைத்து தைத்தால், சல்வாரின் முன் பக்க முழு நீளத்துக்கும் வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று அல்லது ஒன்றரை இன்ச்சுக்கு மேல் வேண்டாம்.
குண்டாக இருப்பவர்கள்....
* ஸ்லிட்டில் ஜரிகை வைத்து தைக்காதீர்கள். அது சுற்றளவை கூட்டி காண்பிக்கும்.
* எந்த டிசைனும் மெல்லியதாக இருக்கட்டும். அடர்த்தி டிசைன்களே வேண்டாம்.
* முழுக்கை டாப்ஸ், மிகவும் குறைந்த கையுள்ள டாப்ஸ் உங்களுக்கு பொருந்தாது. நடுத்தர நீளம், முக்கால் கை பொருந்தும்.
* ரொம்ப டைட் வேண்டாம். லூசாகவும் வேண்டாம். இடுப்பு மட்டும் சற்று லூசாக இருக்கட்டும். அது மடிப்புகளை மறைக்கும்.
* அகலமான சல்வார், பஞ்சாபி பைஜாமா உங்களுக்கு சரிவராது. காலை ஒட்டின, அகலம் குறைவான சல்வார் நன்றாகப் பொருந்தும்.
* சுருக்கம் வைத்த பைஜாமா வேண்டாம். இடுப்பு அளவை மேலும் அதிகரித்துக் காட்டும்.
* மேல்புறம் சுருக்கம் கொடுத்துத் தைக்காமல், ஒரு ஜாண் பட்டி கொடுத்து அதற்கு கீழிருந்து சல்வார் வரும்படி தைத்து கொள்ளுங்கள். இடுப்பு இளைத்த மாதிரி காட்டும்.
* பார்டர் அழுத்தமான டிசைன், திக் லைன் போட்ட மெட்டீரியல் வேண்டவே வேண்டாம்.
* காட்டன் லைனிங் கொடுத்து தைக்கக்கூடிய லேஸ், ஷிபான் துணிகள் வேண்டாம். குண்டாக காட்டும். ஜீன்ஸ் அணிவதை தவிர்த்து விடுங்கள். குளிர் பிரதேசங்களுக்கு போனாலும் ஓவர்கோட் இருக்குதே.
ஒல்லியாக இருப்பவர்களுக்கான உடை:
* இப்போதைய ஃபேஷனான ஷார்ட் டாப்ஸ் உங்களுக்கு நன்றாகப் பொருந்தும்.
* பளீர் நிறமாகத் தேர்ந்தெடுங்கள்.
* குட்டை ஸ்லீவ் அல்லது மீடியம் ஸ்லீவ் ஓகே.
* ஸ்லீவ் லெஸ் டாப்ஸ் உங்களை உயரமாகக் காட்டும்.
:* லூசான சல்வார், பேன்ட் போன்ற சல்வார், ஜீன்ஸ் உங்களுக்குப் பொருந்தும்.
* காட்டன் துப்பட்டா என்றால் ஒரு பக்கமாக, தோள் பட்டைக்கு வெளியில் வராதபடி அணிந்து கொள்ளுங்கள்.
* ஷிபான் துப்பட்டாவாக இருந்தால் இரு பக்கமாக மார்பு வரை இறக்கி போடுங்கள்.
* ஜீன்ஸ், டி-ஷர்ட் உங்களுக்குப் பிரமாதமாக இருக்கும். டைட் ஜீன்ஸ் என்றால் லூஸ் ஷர்ட் நல்லது. அகலமாகக் காட்டும். லூசான ஜீன்ஸ் என்றால் ஷார்ட் டாப்ஸ் போடலாம்.
உயரமானவர்களுக்கான உடை அலங்காரங்கள்:
புடவை:
* பருமனாக இருந்தால் டார்க் கலர்ஸ் பொருந்தும்.
* மாநிறம், கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் வேண்டாம். அழுத்தமான காம்பினேஷன் (கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள், குறுக்கு கோடுகள் தைரியமாக செலக்ட் பண்ணலாம்.
* அகலமான கரை வைத்த புடவைகள், முப்போகம் (சேலையின் மொத்த உயரத்தை மூன்றாகப் பிரித்து 2 அல்லது 3 கலரில் வரும்) புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை.
* பெரிய உடம்பும், பெரிய மார்பகங்களும் இருந்தால் மெல்லிய ஆடைகளே வேண்டாம். உருவமும் உடல்பாகங்களும் மேலும் பெரிதாகத் தோற்றம் தரும்.
* பட்டு, கஞ்சி போட்ட காட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக இருப்பவர்களை ஓரளவு பூசினாற்போல காட்டும். நீளத் தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சயமாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும்.
குஜராத்தி ஸ்டைலில் கலக்கலாம். உயரத்தைக் குறைத்து, அகலமாகக் காட்டும். அகலமான பார்டர், நல்ல கான்ட்ராஸ்ட் கலர் புடவையை செலக்ட் செய்யுங்கள்.
* பிரின்டட் புடவைகளை அணியும்போது அதற்கு கான்ட்ராஸ்டான பிளவுஸ் போடுங்கள். அகல பார்டர் புடவை நல்லது. உயரத்துக்கு அழகான தோற்றம் தரும்.
* பெரிய உருவங்கள் அச்சிடப்பட்ட புடவை கட்டுங்கள்.
பிளவுஸ்:
ஒல்லியானவர்கள் ஹை காலர் நெக் அல்லது பின்புறம் க்ளோஸாக வந்து முன்புறம் பாட் நெக் அல்லது யு-நெக் மாதிரி தைத்துக் கொண்டால் பொருத்தம். பாதி காலர் நெக் என்றால் முன்பக்கம் யு, ப வடிவில் தைத்துக் கொள்ளலாம். ரொம்ப லோ நெக் வேண்டாம். எலும்பு துருத்திக் கொண்டு, மேலும் உங்களை ஒல்லியாகக் காட்டும்.
* கை மட்டும் ஒல்லியாக இருப்பவர்கள் கஃப் ஸ்லீவ், பட்டர்ஃப்ளை ஸ்லீவ் வைத்துத் தைத்துக் கொள்ளலாம். கை சற்று குண்டாகக் காண்பிக்கும். கழுத்தின் முன் அல்லது பின்புறம் டிசைன் வைத்த பிளவுஸ் தைத்துக் கொள்ளலாம்.
* சற்று சதைப் பிடிப்பு இருப்பவர்களுக்கு லோ நெக் அழகாக இருக்கும். பிளவுஸ் முழுக்கை, முக்கால் கை, நடுத்தர கை எல்லாமே உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும். ஸ்லீவ் லெஸ், ஷார்ட் ஸ்லீவ், மெகா ஸ்லீவ் ஓகே. ஷார்ட் ஸ்லீவ் சற்று லூசாக தையுங்கள்.
* குச்சி போல கை உள்ளவர்கள் ஷார்ட் ஸ்லீவ் அணிய வேண்டாம். அகல ஜரிகை, ரெட்டை பேட்டு ஜரிகை ஆகியவற்றை நீங்கள் அணிந்து கொள்ளும் உடைக்கேற்ப தைத்துக் கொள்ளலாம்.
* ப்ளைய்ன் பிளவுஸூக்கு கையில் மட்டும் லேஸ் வைத்து தையுங்கள். பிளவுஸின் உயரம் உங்கள் புடவையின் உயரத்திலிருந்து 4 இன்ச் வரை இருக்கலாம். டிசைன் பிளவுஸில் ஜரிகை, ஜம்கி, மணி போன்றவை வைத்து தைத்தால் மேலும் அழகூட்டும். சற்றே புடவையை இறக்கிக் கட்டினாலும் அழகாகவே இருக்கும்.
உயரமானவர்கள்....
* சுடிதார் டாப்ஸை சற்று இறக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உயரத்தை சற்ற குறைத்து காண்பிக்கும்.
* லைட் கலரில் திக்கான உடைகளைத் தேர்ந்தெடுங்கள்.
* நிறைய பூக்கள் வைத்த டாப்ஸ் லைனிங் கொடுத்த லேஸ் கமீஸ், ஜரிகை வைத்து தைத்த பட்டு கமீஸ் உங்களுக்கு நன்றாக இருக்கும்.
* டாப்ஸின் சைடு டீப் ஸ்லிட் அற்புதமாக பொருந்தும்.
* கழுத்து, தோளின் இருபக்கங்களிலும், ஸ்லிட்டின் ஓரத்திலும் லேஸ், ஜரிகை, ஜம்கி எம்ப்ராய்டரி வேலைப்பாடு செய்து தைக்கலாம்.
* முன் பக்கம் அகலமான ஜரிகை, அடர்த்தியான எம்ப்ராய்டரி இடுப்புவரை வருமாறு தைத்து போடலாம்.
* நல்ல கான்ட்ராஸ்ட் கலராக பார்த்து அணியலாம். கருப்பு-ஆரஞ்ச், அரக்கு-மஞ்சள் போன்ற பளீர் கலர்கள் எடுப்பாக இருக்கும்.
* முழு கை, முக்கால் கை உங்களுக்கு மிக அழகாக இருக்கும்.
* டார்க் நிறத்தில் கான்ட்ராஸ்ட் பார்டர், குறுக்கு கோடுகள் உள்ள சல்வார் உங்களுக்கு பொருந்தும்.
துப்பட்டா:
* ஷிபான் துப்பட்டாவை கழுத்தோடு அல்லது கழுத்தை சுற்றி போட்டு கொள்ளுங்கள்.
* ஸ்டார்ச் துப்பட்டாவை ஒரு பக்கமாக தோளுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்படி போட்டுக் கொள்ளலாம்.
நகைகள்:
நீண்ட கழுத்து, வட்ட முகம், நீண்ட காது மடல் என்று கழுத்து, காது பகுதிகளின் அமைப்பை வைத்தே என்னென்ன நகை பொருத்தமாக இருக்கும் என்பதைத் தெளிவாக சொல்லிவிடமுடியும். உங்கள் முக வடிவமைப்பு, கழுத்தின் நீள அகலத்தை பொருத்து நகைகளைத் தேர்ந்தெடுங்கள்.
பொதுவாகவே ஒல்லியும், உயரமுமாக இருப்பவர்களுக்கு கழுத்து சற்று நீளமாகத்தான் இருக்கும்.
* அகலமான நெக்லஸ், சோக்கர், குந்தன் ஜூவல்லரி ஆகியவை அணியலாம். கூடவே ஒரு நீளமான செயின் அணியுங்கள்.
* குட்டை கழுத்து பகுதி உள்ளவர்கள் ஒற்றைக்கல் நெக்லஸ் அல்லது தடிமனான சங்கிலியில் டாலர் வைத்து அணியலாம்.
* குண்டாகவும், குள்ளமாகவும் இருப்பவர்களுக்கு கழுத்து நீளம் குறைவாக இருக்கும். பட்டையான நெக்லஸ், சோக்கர் போட்டால் அது கழுத்தை இன்னும் அகலமாகக் காட்டுவதுடன் இருக்கிற கொஞ்சநஞ்ச இடத்தையும் அடைத்துக் கொள்ளும்.
* மெல்லிய சங்கிலி, சின்ன சைஸ் முத்து, மெல்லியதான பீட்ஸ் இவற்றை ப்ளெய்ன் ஆகவோ அல்லது சிறிய டாலருடனோ அணிந்து கொண்டால் எடுப்பாக இருக்கும். மெல்லிய, நீண்ட செயின்கள் நிச்சயம் உங்களுக்கு அழகுதான். டாலர் இல்லாமல் அணிந்தால் இன்னும் அழகாக இருக்கும்.
* கழுத்தைச் சுற்றி செயின் படர்ந்திருக்கும் பகுதிகளில் அதிக கற்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். கழுத்துக்கு கீழே தொங்கும் செயின் பகுதியில் கற்கள் பதித்திருந்தால் தப்பில்லை. அதிக நகைகள் போடாமல் மெல்லிய செயின், சிறிய காதணிகள் போட்டால் அம்சமாக இருக்கும்.
* அகலமான நகைகளைத் தவிர்த்துவிடுங்கள். உடலின் நிறத்துக்கு ஏற்ப உடை மற்றும் நகைகளைத் தேர்ந்தெடுங்கள்.
சிவப்பு நிறம் உள்ளவர்கள்:
* ரூபி, பச்சை, நீலம் போன்ற கற்கள், மணிகள் உள்ள நகை அணியலாம்.
கறுப்பு நிறம் உள்ளவர்கள்:
வைர நகைளை அணிந்தால் அவ்வளவு அழகாக இருக்கும்!
* முத்து வகைகள், வெள்ளை, பிளாக் மெட்டல் நகைகள் உங்களுக்கு மிகமிக அழகாக பொருந்தும்.
* அதிகப்படியான நகைகளை அணியவேண்டாம். சின்னதாக ஐந்து கல் பதித்த அமெரிக்கன் டயமண்ட் தோடு, மெலிதான செயினில் பதக்கம், ஒரு துளி தெறித்தது போன்ற ஒற்றைக் கல் மூக்குத்தி போன்றவை உங்கள் முக அழகை பிரகாசமாகக் காட்டும்.
* முத்து செட்டும் அம்சமாக இருக்கும்.
* தங்கத்திலும் பட்டை பட்டையாக இல்லாமல் மெல்லிய நகைகள் அணியுங்கள்.
* ஒல்லியானவர்கள நிறைய வளையல் அணிந்து கொள்ளுங்கள்.
* பட்டையான ஜரிகை போட்ட புடவைகள் அணிந்து கொண்டால், நகை சற்று சிம்பிளாக இருக்க வேண்டும்.
* சிம்பிள் புடவையாக இருக்கும்பட்சத்தில் குந்தன், டெம்பிள் போன்ற நகைகள் அணியலாம். இது எல்லோருக்குமே பொருந்தும்.
டல் ஒயிட், க்ரே, ஸ்கை ப்ளூ, பேபி பிங், அல்ட்ரா லைட் ப்ரவுன் போன்றவை எந்த டிசைன் நகைகளுக்கும் பொருத்தமான ஆடை வண்ணங்கள்.
* கால்களின் கணுக்கால் பகுதி ஒல்லியாக இருந்தால் பட்டையான கொலுசு போடுங்கள்.
* குண்டான கால்களுக்கு மெல்லிய ஒரே சலங்கை வைத்த கொலுசு அழகாக இருக்கும்.
* நடுத்தரமான கால்களுக்கு மெல்லிய, பட்டையான கொலுசு இரண்டுமே பொருத்தமாக இருக்கும்.
* மெல்லிய விரலுக்கு பட்டையான சலங்கை வைத்த மெட்டி அழகாக இருக்கும்.
* விரல்கள் கொழுகொழுவென்று இருந்தால் மெல்லிய மெட்டிகள் போடலாம். குறிப்பாக இரண்டாவது விரலில் மெட்டி போட்டால் அழகுக் கூடும்.
செருப்பு:
* மிகவும் குள்ளமாக இருப்பவர்கள் உயரத்தை கூட்டிக்காட்ட ஹீல்ஸ் காலணி அணியலாம். ஆனால், குதிகால் ஹீல்ஸ் மட்டுமே உள்ள காலணியை அணியாதீர்கள். இதனால் எலும்பு வளர்ச்சி தடைபடுவதோடு, தேவையில்லாத உபாதைகளை ஏற்படுத்தி விடும்.
* உயரமானவர்கள் தட்டையான செருப்பு அணிய வேண்டும். இவர்கள் ஹை-ஹீல் செருப்பு போட்டுக்கொண்டு நடந்தால் பொருத்தமாக இருக்காது.
சீசனுக்கு தகுந்த மாதிரி துணிகளை தேர்வு செய்வது எப்படி?
இப்போதெல்லாம் குறிப்பிட்ட கம்பெனி பெயரைச் சொல்லி பிரான்டட் ஆடைகளை வாங்குவது வழக்கமாகி விட்டது. அது நல்லதுதான். தரம் இருக்கும். ஆனால் அது சீசனுக்கு ஏற்ற உடையா என்பதையும் பார்க்க வேண்டும். கம்பெனிகள் தள்ளுபடி என்ற பெயரில் ஆடைகளை விற்கும் போது சீசனுக்கு பொருத்தமில்லாத ஆடைகளை வாங்கி அணிந்து தேவையில்லாமல் கஷ்டப்படுகிறோம்.
ஃபேஷன் டிசைனர்கள் ஆடைகளைப் பொறுத்தவரை இரண்டு சீசன்களாக பிரிக்கிறார்கள். வெயில் காலம் ஆரம்பித்து வசந்த காலம் வரை (மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) ஒரு சீசனாகவும், இலையுதிர் காலம் ஆரம்பித்து குளிர்காலம் வரை (செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி) இன்னொரு சீசனாகவும் பிரித்திருக்கிறார்கள். வெயில் காலத்திற்குத் தயாரிக்கப்படும் ஆடைகள் வசந்த காலம் வரையிலும், இலையுதிர் காலத்தில் தயாரிக்கப்படும் ஆடைகள் குளிர்காலம் வரைக்கும் பொருந்துமாறும் ஆடைகளைத் தயாரிக்கிறார்கள்.
வெயில் காலம் முதல் வசந்த காலம் வரைக்கும் பொருத்தமானவை:
பிரைட் கலர்களில் பெரிய பிரின்ட் போட்ட டிசைன்களில் மிருதுவான துணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த சீசனுக்கு, காட்டன் உடைதான் உடலுக்கு இதமாக இருக்கும். குர்தா, சல்வார், சேலை, பைஜாமா, வேட்டி சட்டை எல்லாமே காட்டனில் கிடைக்கும் போது கவலையே படாமல் விதவிதமாகத் தேர்ந்தெடுத்து அணியலாம்.
* காஞ்சி காட்டன் சேலைகள், சுங்கிடி காட்டன் சேலைகள், ஜெய்புரி, ராஜஸ்தானி, சில்க் காட்டன் என்று விதவிதமாக கிடைக்கிறது. காட்டன் மெட்டீரியல் வாங்கி சுடிதார், சல்வார், ஷார்ட் டாப் என தைத்துக் கொள்ளலாம்.
* ஓப்பன் நெக், ஸ்லீவ்லெஸ் ஆடைகள் வியர்க்காமல் ஃப்ரீயாக இருக்கும்.
* வெயில் காலங்களில் ஏற்படும் கசகசப்பை மீறி கல்யாண வீடுகளுக்கு, பார்ட்டிகளுக்கு போகும்போது பட்டுச் சேலைதான் உடுத்திச் செல்லவேண்டும் என்றில்லை. ரிச்சான புடவைகள், காக்ரா சோளி போன்ற உடைகள் காட்டனிலேயே கிடைக்கிறது. பட்டுப் புடவையை விட அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.
ஆண்களுக்கு காட்டன் வேட்டி, அரைக்கை சட்டை அலுவலகத்திற்கு செல்லும் ஆண்களுக்கு காட்டன் பேன்ட், சட்டை வசதி, கை வைக்காத, ஓப்பன் நெக் பனியன் போடலாம்.
அழகு குறிப்புகள்:பொட்டு முதல் புடவை வரை உடலுக்கு பிடிச்சிருக்கணும்!
ராசராச சோழனின் கோயில் பெருமிதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஜாதி!
ராசராச சோழனின் கோயில் பெருமிதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஜாதி!
ராசராசனின் பெயரை விண்ணளவு உயர்த்திக் காட்டும் கலைப்பெட்டகமாய் இன்றளவும் உயர்ந்து நிற்பது தஞ்சைப் பெரிய கோயில். ராசராசனின் ஆட்சிக் காலம் பற்றிய செய்திகளில் பலருக்கும் பல்வேறு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், தமிழர்களின் ஒப்பற்ற கட்டடக் கலைத் திறனுக்கு சான்றாய் தனிச் சிறப்போடு நிற்கிறது தஞ்சைப் பெரிய கோயில். கி.பி. 1009இல் இவன் காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட இக்கோயில் கோபுரத்தின் உயரம் 216 அடி. அக்கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள கல் 80 டன் எடை கொண்டதாகும். 25.5 அடி சதுரம் உடைய அந்த ஒற்றைக் கல்லை கோபுரத்தின் உச்சிக்குக் கொண்டு செல்ல 10 கி.மீ. தொலைவுக்கு சாரங் கட்டித்தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். இன்றைக்கும் தஞ்சை அருகே "சாரப்பள்ளம்" என்கிற ஊர் உள்ளது. இரும்பும், சிமெண்டும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அகிலமே வியக்கின்ற இந்த அருஞ்செயலைச் செய்து முடித்த நம் தமிழ் முன்னோர்களின் ஆற்றல்சால் கட்டடக் கலைத்திறன் போற்றுதற்கு உரியதே!
ஆனால், இவ்வளவு பெரிய அறிவு நுட்பமும் கலைத் திறனும் கொண்ட அந்தக் கால உழைப்புச் சமூகத்தின் உள்ளார்ந்த வாழ்நிலை என்ன? வான் முட்ட எழுந்து நிற்கும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் கடைக்காலில் புதைந்து கிடக்கும் உழைக்கும் மக்களின் கண்ணீரும் செந்நீரும் - இந்த ஆயிரமாம் ஆண்டு விழா ஆர்ப்பாட்டப் பேரிரைச்சலில் நம்மால் அடையாளம் காணப்படுமா?
சாதிப் பிரிவுகள் அற்றுச் சமத்துவ வாழ்வு வாழ்ந்த தொல் தமிழ்க் குடியில், தொல்காப்பியர் காலத்திலேயே பிளவுகள் தொடங்கி விட்டன. அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் என்கிற நால்வகைப் பிரிவும் செய்யுந் தொழிலின் அடிப்படையில்தான் முதலில் அமைந்தது. பின்னர் அதுவே சாதியச் சழக்காய் நிலைத்து விட்டது என்று சமூக ஆய்வாளர்கள் சிலர் எழுதுகின்றனர். ஆனால், தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலேயே பார்ப்பனரின் முதுகில் பூணூல் மாட்டப்பட்டு விடுகிறது.
நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய
- தொல். பொருள். மரபியல் 66
முப்புரி நூல் (பூணூல்), தண்ணீர் சொம்பு, முக்கோல், அமர்வதற்கான இருக்கை ஆகிய அந்தணர்க்குரியன என்பது இதன் பொருள்.
ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன
- தொல். பொருள். அகத்திணையியல் 28
என்கிற நூற்பா, "ஓதுதல்" ஆகிய "கல்வி" என்பது, உயர்ந்தோரான அந்தணர்க்குதான் உரியது என்று சொல்லப்பட்டுவிட்டது.
இதன் தொடர்சியானது, பின் நாட்களில் பாறைபோல் கெட்டிப்பட்டுப் பிற்கால சோழப் பேரரசில் அசைத்துப் பார்க்கவே முடியாத பார்ப்பன மநுதரும ஆட்சியாகவே நிலைத்துவிட்டது. ராசராசன் காலத்தில் ஆயிரக்கணக்கான அயல்நாட்டுப் பார்ப்பனர்கள் அலையலையாக இங்கே இறக்குமதி செய்யப்பட்டனர். தமிழ் நாட்டுக் கோயில்கள், கல்வி நிறுவனங்கள், மடங்கள் ஆகியவற்றில் அந்தப் பார்ப்பனர்கள் - அர்ச்சகர்களாகவும், புரோகிதர்களாகவும், வேத பாராயணம் செய்வோராகவும் அமர்த்தப்பட்டனர்.
வேத நெறியைத் தழைத்தோங்கச் செய்ய, சோழ மன்னர்கள் பார்ப்பனர்களுக்குப் பொன்னையும் பொருளையும் வாரிவாரி வழங்கினார்கள். அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் தனி நிலங்களும், முழு முழுக் கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அவ்வாறு அரசர்களால் வழங்கப்பட்ட பார்ப்பனக் கிராமங்கள் - அக்கிரகாரம், அகரம், சதுர்வேதிமங்கலம், பிரமதேயம் என்கிற பெயர்களில் செல்வச் செழிப்போடு விளங்கின. அந்தக் கிராமங்களில் அரசனின் ஆணைகள்கூட செல்லுபடி ஆகா. எவ்வகையான வரிகள், கட்டணங்கள், கடமைகள் ஆகியவற்றிலிருந்தும் அவற்றுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டன.
ராசராச சோழன், அவன் மகன் ராசேந்திர சோழன், குலோத்துங்க சோழன் என நீளும் பிற்காலச் சோழர் ஆட்சியில், உழைக்கும் மக்களை கசக்கிப் பிழிந்து மிகக் கொடிய முறையில் பல்வேறு வகையான வரிகள் வசூலிக்கப்பட்டன. அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தில் இருந்துதான் விண்முட்ட ஆலயங்கள் எழுப்பப்பட்டன. மநுதர்ம விதிகள் சட்டமாக்கப்பட்டன. பார்ப்பனர்கள் கேட்டவை கேட்டபடி அளிக்கப்பட்டன.
சோழர் கால ஆட்சிச் சிறப்புகள் பலவற்றுள் ஒன்றாகச் சொல்லப்படுவது அவர்கள் நாடு, கூற்றம் என தம் ஆட்சிப் பரப்பைப் பல உட்கூறுகளாகப் பிரித்து ஆண்டார்கள் என்பதாகும். நிலங்களை அளந்து நாட்டைப் பகுத்தமையும், ஊர்ச்சபைகள் அமைத்துக் குடிமக்கள் நலன் காத்தமையும் சிறப்பாகப் பேசப்படுகிறது. சோழர் காலத்துக் குடவோலை முறை, பள்ளிப் பாடநூல்களில் தவறாமல் இடம் பெறும் ஒரு செய்தியாகும். இதுபற்றி உத்தரமேரூர்க் கல்வெட்டுகளில் பின் காணப்படுவன:
"உத்தரமேரூர் கிராமம் முப்பது தொகுதிகள் அல்லது குடும்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இக்குடும்புகள் ஒவ்வொன்றும் சபைக்குத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதியுடையவர் ஒருவரை நியமனம் செய்தல் வேண்டும். அவ்வாறு குடும்புகளால் நியமனம் பெறுவோர் அனைவரும் கூடிக் குடும்புக்கு ஒருவராக மொத்தம் முப்பதின்மர் குடவோலை முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஓலை நறுக்குகளில் பெயர்கள் எழுதப்படும். அவை ஒரு குடத்தில் இடப்பட்டுக் குலுக்கப்படும். பின் சபைக்குத் தேவைப்படும் உறுப்பினர்களை, ஒரு சிறுவனை ஏவி கைவிட்டு எடுக்கச் செய்வர்". இந்த முறையில் அமைந்த குடிநாயக மாண்பைப் பெருமையாகப் பேசுவோர் ஒன்றை மறைத்து விடுகின்றனர்.
கிராம நிர்வாகத்தில் முதன்மைப் பாங்காற்றும் அந்த முப்பது உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டிய தகுதிகளாக, உத்தரமேரூர்க் கல்வெட்டுகள் உரைப்பன யாவை?
அவர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்த அளவு கால்வேலி நிலமாவது இருக்க வேண்டும். சொந்தமாய் வீட்டுமனை இருக்க வேண்டும். 35 வயதிற்குக் குறையாமலும் 70 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டிய அவர்களுக்குரிய மிகமிக முதன்மையான தகுதி, அவர்கள் வேதத்துடன் தொடர்பு கொண்ட மந்திர பிராமணங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேதத்தை ஓதும் திறனைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்காணும் ஊர் உறுப்பினர்களின் தகுதிகளில் இருந்து சோழர் கால கிராம ஆட்சி என்பது யாரால், யாருடைய நலனுக்காக நடைபெற்றுள்ளது என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது. அதுமட்டுமல்ல, சோழர் கால மெய்கீர்த்திகள் அனைத்திலும் அம்மன்னர்கள் சாதி ஒழுக்கத்தை நிலைநாட்டுவதையே தம் சீரிய அரச கடமையாகக் கொண்டு வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. ஆரிய ஒழுக்கங்களைப் பாராட்டும் சாத்திரங்களும் புராணங்களுமே நாடு முழுவதும் கற்பிக்கப்பட்டடுள்ளன. அரசர்கள் அமைத்த கல்வி நிறுவனங்களில் தமிழ் இலக்கண இலக்கியங்கள் பயிற்றுவிக்கப்படவில்லை. மாறாக, இதிகாசங்கள், சிவதருமம், ராமநுசபாடியம், மீமாமிசை, வியாகரணம் போன்ற வடமொழி இலக்கிய இலக்கணங்கள் சொல்லித் தரப்பட்டுள்ளன.
சோழர் ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் பிழை இல்லாமல் தமிழை எழுதவோ, படிக்கவோ தெரியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான சோழர் காலத்துக் கல்வெட்டுகள், எழுத்துப் பிழைகள் மலிந்தனவாய்க் காணப்படுகின்றன. இவற்றைக் கொண்டு பார்த்தால், அந்தக் கல்வெட்டுகளை செதுக்கிய கல்தச்சர்கள் குறைந்த எழுத்தறிவு கொண்டவர்களாய் இருந்திருக்க வேண்டும். இதில் வேடிக்கை என்னவெனில், செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், சேக்கிழார், கம்பர், புகழேந்தி போன்ற பெரும்பெரும் தமிழ்ப் புலவர்கள் - பல்லவர் மற்றும் சோழர் ஆட்சிக் காலங்களில் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சோழர் காலத்தில் எழுதப்பட்ட சைவ, வைணவ இலக்கியங்கள் பலவும் வடமொழிக் கலப்பை மிகுதியாகக் கொண்டிருந்தன.
தமிழினத்திற்கே பெரும் தலைக்குனிவாய் உள்ள சாதி வேற்றுமைகள் பல்கிப் பெருகி வேர்விட்டது சோழர்கால ஆட்சியில்தான் என்பது, வரலாறு பதிவு செய்து வைத்துள்ள மாபெரும் உண்மையாகும். வேளாளர், பிள்ளைமார் முதலியோரும், செட்டிமார்களும் மற்றவர்களைவிட தாம் உயர்ந்தோர் என்றும், பார்ப்பனர்க்கு அடுத்த நிலையுடையவர்கள் தாம் தாம் என்றும் தருக்கி வாழ்ந்தது, சோழர் கால ஆட்சியில் கெட்டிப்பட்டுப்போன பெருங்கேடாகும்.
வரலாற்றில் மாறாத வடுவாக நிலைத்துவிட்ட வலங்கை இடங்கைக் குலங்களின் குருதி சிந்திய போராட்டங்கள் பற்றி கே.கே.பிள்ளை அவர்கள் தமது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"சோழர் காலத்தில் ஓங்கி வளர்ந்த குல வேறுபாடுகள், மிகவும் தீய விளைவுகளுக்கு களனாக இருந்தது வலங்கை - இடங்கை என்னும் பிளவாகும். இவ்விரு பிரிவினருக்கும் இடையே பல கடும் பூசல்கள் நேரிட்டுள்ளன. இப்பூசல்கள், சோழப் பேரரசின் காலத்திற்கு முன்னே தோன்றி, விசயநகரத்துப் பேரரசர்கள் காலத்தில் தொடர்ந்து வளர்ந்து வந்து - ஆங்கிலேயர் அரசாட்சியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் நடைபெற்று வந்தன. சென்ற நூற்றாண்டில் இப்பூசல்களின் காரணமாக சென்னையின் தெருக்களில் மனித ரத்தம் சிந்தியதுண்டு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலங்கை - இடங்கை வேறுபாடுகள் திடீரென்று மறைந்துவிட்டன. இப்போது மக்களுக்கு அப்பெயர்களின் பொருளே இன்னதென விளங்குவதில்லை. இந்த வேறுபாட்டை வரலாற்று நூல்களின் பக்கங்களில்தாம் விளங்கக் காண்கின்றனர். ஒன்பது நூற்றாண்டுகளாகத் தமிழரின் வாழ்க்கையை அலைக்கழித்து வந்த சமூகக் கேடு ஒன்றன் தோற்றமும் முடிவும் வரலாற்று விளக்கங்காணாத மறைபொருள்களாகவே உள்ளன". ("தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்" - பக். 321)
சோழர் ஆட்சிக் காலத்தில் பெண்களின் நிலை மிகவும் இரங்கத்தக்கதாய் இருந்தது. இரு கண்கள் எனப் போற்றப்பட வேண்டிய பெண்கள் பலரையும் கோயில்களில் தேவரடியார்கள் ஆக்கிய பீடு மிக்கப் பெரும் பணியைச் செய்தவன் மாமன்னன் ராசராசன் ஆவான். இன்று ஆயிரமாம் ஆண்டு காணும் இதே தஞ்சைப் பெருவுடையார்க் கோயில் திருத் தொண்டுக்காக, ராசராசன் நானூறு தேவரடியார்களை அமர்த்தினான். அவர்களுக்குத் தனித்தனியே வரிசையாக வீடுகள் அமைத்துக் கொடுத்தான் என்று தஞ்சைக் கோயில் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. சோழர் காலத்தில், பெண்கள் உடன்கட்டை ஏறும் கொடுமையும் நடந்துள்ளது என்பதற்குப் பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழர் பண்பாடு என்று பெருமை பேசப்படுகிறது. ராசராச சோழனுக்கு உலோகமாதேவி, சோழமாததேவி, திரைலோக்கியமாதேவி, பஞ்சவன்மாதேவி, அபிமான வல்லி, லாடமாதேவி, பிருதிவிமாதேவி, மீனவன்மாதேவி, வீரநாராயணி, வல்லவன்மாதேவி, வனவன்மாதேவி எனப் பன்னிரெண்டு மனைவியர் இருந்தனர் என, வே.ஆனைமுத்து தாம் எழுதிய "தமிழ் நாட்டில் பண்பாட்டுப் புரட்சி" என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை சார்ந்த நேரிய வாழ்வும், நெடிய வரலாறும், நிறைந்த இலக்கியச் செல்வங்களும் பெற்ற ஒப்பற்ற இனமாகத் தமிழர் வாழ்ந்தனர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆனால், உண்மையான இயங்கியல் கண்ணோட்டத்தில் தமிழர் வரலாற்றை அணுகுவதும், மீள் ஆய்வு செய்வதும் மிகமிக இன்றியமையாததாகும். தமிழர் வீழ்ச்சிக்குப் பெருங்காரணமாய் அமைந்த வர்ணாசிரம ஆதிக்கம், சாதியக் கொடுமைகள், பெண்ணடிமைத் தனம், உழைக்கும் மக்களுக்கு எதிரான கொடிய சுரண்டல் போன்ற அழிக்க முடியாத வரலாற்றுக் கறைகளைப் பிற்காலச் சோழர் ஆட்சி, மிகமிக அழுத்தமாகவே பதிவு செய்துள்ளது. சாதி, மத ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமத்துவப் பொதுமைச் சமூகத்தை தமிழ் மண்ணில் அமைத்திட முயலும் யார்க்கும் தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாம் ஆண்டு நிறைவு விழா, எந்த வகையிலும் நிறைவைத் தராது என்பது உறுதி!
சோழர் காலத்தில் உழைக்கும் மக்களிடமிருந்து கட்டாயமாக பெறப்பட்ட வரிகள்
மீன்பாட்டம்: மீன்பிடி தொழிலுக்கு மீனவர் செலுத்திய வரி
வட்டி நாழி: கழனிக்குத் தண்ணீர் பாய்ச்சிய நாழிகையைக் கணக்கிட்டு அதன்படி உழவர்கள் செலுத்திய தண்ர் வரி
கண்ணாலக் காணம்: திருமணம் செய்து கொண்டால் செலுத்தப்பட்ட வரி
வண்ணாரப்பாறை: துணி வெளுப்பவர்கள் செலுத்திய வரி
குசக்காணம்: குயவர்கள் (மண்பாண்டம் செய்வோர்) செலுத்திய வரி
தறிக் உறை: தறி நெய்யும் நெசவாளர் செலுத்திய வரி
தரகுப்பட்டம்: தரகர்க்கு விதிக்கப்பட்ட வரி
ஆட்டுக்கறை: ஆடு வளர்ப்பவர் செலுத்த வேண்டிய வரி
நல்லெருது: எருது, பசு வளர்ப்போர் செலுத்த வேண்டிய வரி
ஓடக் கூலி: ஓடம் செலுத்துவோர் கட்டிய வரி
ஈழம் பூட்சி: கள் இறக்குவோர் செலுத்திய வரி
- கே.கே. பிள்ளை எழுதிய "தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்", பக். 314, 315 வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113.
வெட்கங்கெட்ட ராசராசன்கள்
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராசராசனுக்கு, அக்கோயிலுக்கு உள்ளே சிலை வைக்க - அன்றும் முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி அவர்கள் முயன்றபோது, அதற்கு மத்திய தொல் பொருள் துறை அனுமதியளிக்க மறுத்துவிட்டது. இதனால் கோயிலுக்கு வெளியே அச்சிலையை முதல்வர் நிறுவினார். இப்பெருங்கோயிலைக் கட்டிய ராசராசன், பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டவன். ஆனால், பிறப்பின் அடிப்படையில் அவன் சூத்திரன் என்பதால், அக்கோயிலின் கருவறைக்குள் நுழைவதற்கு அவனுக்கு அனுமதியில்லை.
அரசப்பெருமிதங்களில் கரையும் இன்றைய ராசராச சோழன்களுக்கும் அதுதான் நிலை! ஆனால், இதுகுறித்து ராசராசனும் வெட்கப்படவில்லை; ஆயிரமாண்டுகள் கடந்தும் பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மை மக்கள் சூத்திரர்களாகக் கருதப்பட்டு, கோயில் கருவறைக்குள் நுழைய முடியாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வராமல், கோயில் கட்டடப் பெருமிதங்களில் திளைக்கும் தமிழ்ச் சமூகமும் வெட்கப்படவில்லை.
ராசராச சோழனின் கோயில் பெருமிதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஜாதி!