Friday, February 18, 2011

TamilActorVijay to Protest Against Sri Lankan army in support of Tamil Fishermen

TamilActorVijay to Protest Against Sri Lankan army in support of Tamil Fishermen




தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் சிறை பிடித்ததை கண்டித்து, நாகப்பட்டினத்தில் வருகிற 22-ந் தேதி நடிகர் விஜய் ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது, அவர்களை சிங்கள ராணுவம் சுட்டுக்கொல்வது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் நாகை, காரைக்காலை சேர்ந்த 112 மீனவர்களை, சிங்கள ராணுவம் சிறை பிடித்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மேலும் 24 தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் மீண்டும் சிறை பிடித்துள்ளது. சிங்கள ராணுவத்தினரின் அட்டூழியத்தை கண்டித்து, வருகிற 22-ந் தேதி நாகப்பட்டினத்தில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.


இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர் ரவிராஜா நேற்று நாகப்பட்டினத்தில் கூறியது:- நாகை காடம்பாடி மைதானத்தில் வருகிற 22-ந் தேதி மாலை 4 மணிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்திற்கு திரைப்பட இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கண்டன உரை ஆற்றுகின்றனர். முன்னதாக மேடையில், இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர் பாண்டியன், புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் ஆகியோரின் குடும்பத்திற்கு நிதியுதவியும், நாகையை சேர்ந்த 10 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களையும் நடிகர் விஜய் வழங்குகிறார்

Share/Bookmark

No comments:

Post a Comment