Wednesday, February 2, 2011

DMK General Body Meets Today Asssembly Pollls

முன்னாள் அமைச்சர் ஆ.ராசா இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை தி.மு.க. பொதுக்குழு கூடுவதால் பரபரப்பு நிலவுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு போன்றவற்றில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்தலை சந்திப்பது பற்றிய வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தி.மு.க. பொதுக்குழு நாளை கூடுகிறது. சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் பொதுக்குழு கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் முதல்- அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி, துணை செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குண பாண்டியன், அமைப்பு செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் பொதுக்குழுவில் பங்கேற்கிறார்கள். இதில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள், தேர்ந்து எடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள் இடம் பெறுகிறார்கள். பொதுக்குழுவில் சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. தேர்தலை தி.மு.க. எவ்வாறு சந்திக்க வேண்டும் என்பது குறித்து கருத்துக்கள் கேட்டு அறியப்படுகின்றன.

தி.மு.க. தணிக்கை குழு அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள், தொகுதி பங்கீடு, எந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படுகிறது. தேர்தல் பிரசாரம், தலைவர்கள் சுற்றுப்பயணம் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் ஆ.ராசா இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை தி.மு.க. பொதுக்குழு கூடுவதால் பரபரப்பு நிலவுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் உள்பட கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சு நடத்த துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி மற்றும் திமுக நாடாளுமன்ற எம்பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.

Share/Bookmark

No comments:

Post a Comment