Wednesday, February 2, 2011

BlackMoney :NDA leaders,CM to declare the assets

பா.ஜனதா கூட்டணி முதல்-மந்திரிகள் தங்கள் சொத்து கணக்கை வெளியிட வேண்டும், தங்களுக்கு வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் இல்லை என்று அறிவிக்க வேண்டும் என்று அத்வானி அழைப்பு விடுத்துள்ளார்.
கறுப்பு பண விவகாரம் குறித்து விவாதிக்க, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதன்பிறகு, கூட்டணியின் செயல் தலைவர் அத்வானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


கடந்த மாதம் 6-ந் தேதி கறுப்பு பண விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தி விட்டு, பிரதமருக்கு விளக்கமாக ஒரு கடிதம் எழுதினோம். அதை பெற்றுக்கொண்டதாக கூட பிரதமர் பதில் அனுப்பவில்லை. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசு ஒரு அங்குலம் கூட செயல்படவில்லை. இனியாவது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கட்டும்.
ஜெர்மனி போன்ற நாடுகள், கறுப்பு பண முதலைகளின் விவரத்தை தெரிவிக்க முன்வந்துள்ளன. ஆனால் மத்திய அரசு அதை பெற முயற்சிக்கவில்லை. கறுப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு எதிராக, பொத்தாம் பொதுவாக ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். பஞ்சாப் தீவிரவாத விசயத்தில், இதுபோல் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், மேலிட நிர்வாகிகள், எம்.பி.க்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் தங்களுக்கு வெளிநாட்டில் கறுப்பு பணம் இல்லை என்று மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அத்வானி கூறினார்.
அப்போது, உடனிருந்த அகாலி தளம் தலைவரும், பஞ்சாப் மாநில முதல்-மந்திரியுமான பிரகாஷ்சிங் பாதல், "தேசிய ஜனநாயக கூட்டணி முதல்-மந்திரிகள் தங்களது சொத்து கணக்கை அறிவிப்பதுடன், தங்களிடம் கறுப்பு பணம் இருந்தால் எடுத்துக் கொள்ளுமாறு அறிவிக்க வேண்டும்" என்று கூறினார்.
அப்போது நிருபர்கள், "கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவும் சொத்து கணக்கு வெளியிட வேண்டுமா?" என்று அத்வானியிடம் கேட்டனர். அதற்கு அத்வானி, "அனைத்து பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்-மந்திரிகள், சொத்து கணக்கு வெளியிட வேண்டும்" என்று கூறினார். அத்வானி மேலும் கூறியதாவது:-
ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் ஆகிய பிரச்சினைகளில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை தொடர்ந்து கேட்போம். அந்த கோரிக்கையை கைவிட மாட்டோம். அதை கைவிடுவதற்கான ஒரு நியாயமான காரணத்தை கூட மத்திய அரசு இது வரை சொல்லவில்லை. அதே சமயத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபடுவதா? இல்லையா? என்பது பற்றி, கூட்டத்தொடருக்கு முந்தைய நாள் விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

Share/Bookmark

No comments:

Post a Comment