சென்னை சுற்றுப்பயணத்தின்போது அடையாறு பூங்காவை பிரதமர் மன்மோகன் சிங் திறக்கவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவை திறந்துவைப்பதற்காக பிரதமருக்கு தமிழக அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மைக் குழுமம் இந்தப் பூங்காவை அமைப்பதற்கான தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு ஏற்கனவே அனுப்பியிருந்தது. ஆனால், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் தற்பொழுதுவரை பெறப்படாததால் பாரதப் பிரதமர் ஜனவரி 3-ந் தேதி இந்திய அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதாக சென்னைக்கு வரும்பொழுது, பூங்கா திறப்பு நிகழ்ச்சியை சேர்க்க இயலவில்லை. எனவே, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்கப்பெற்ற பின்பு, இந்த பூங்கா திறந்து வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment